உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனோம் பென்: கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் வெடிபொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு அரசு அனைத்து உதவிகளும் செய்யும். நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை