உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "கடைசி வாய்ப்பு தருகிறோம்; பிணை கைதிகளை விடுவியுங்கள்": கெடு விதித்தது இஸ்ரேல்

"கடைசி வாய்ப்பு தருகிறோம்; பிணை கைதிகளை விடுவியுங்கள்": கெடு விதித்தது இஸ்ரேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: '' ரபா நகரில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் துவங்க உள்ள நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம்'' என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசாவின் தெற்கு முனையில் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.ரபாவில் தரைவழித் தாக்குதலைத் துவங்க வேண்டாம் என எகிப்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காசா மீதான தாக்குதலால் வடக்கு, மத்திய பகுதிகளில் இருந்து மக்கள் பெரும்பாலானோர் ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் ஈரான் எச்சரிக்கையை இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. ரபா நகரில் தரைவழித் தாக்குதலை துவக்க இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bye Pass
ஏப் 27, 2024 20:15

நீங்கள் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்யலாமே


J.V. Iyer
ஏப் 27, 2024 18:23

பிணைக்கைதிகளாக உள்ள தன்னுடைய மக்களை மீட்பதற்கு எந்த எல்லைக்கும் போகும் இஸ்ரேலை படைகளுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்கள் இறைவன் உங்களுடன் இருப்பார் பயங்கரவாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் இந்தியாவும் இதுபோன்று செயல்படவேண்டும்


பேசும் தமிழன்
ஏப் 27, 2024 18:16

கடைசி தீவிரவாதி சாகும் வரை தாக்குதலை நிறுத்த கூடாது.... சும்மா இருந்த இஸ்ரேல் நாட்டை சுரண்டி விட்டு விட்டார்கள்... ஹமாஸ் பயங்கரவாதிகள்... இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால்..... குத்துதே... குடையுதே என்றால் எப்படி ???? பயங்கரவாதிகள் இந்த உலகத்தில் வாழ தகுதியில்லாத ஆட்கள் .


Srinivasan Krishnamoorthi
ஏப் 27, 2024 18:02

இப்போ ஹமாஸ் எதுவும் செய்ய முடியாது ஈரான் தான் முடிவு செய்யும் அதிகாரத்தில் உள்ளது யேமன் ஒருகால் ஏதேனும் இடை செருகல் செய்தால் இஸ்ரேல் பிணை கைதிகள் விடுவிக்கப்படலாம்


K.Muthuraj
ஏப் 27, 2024 21:14

உண்மையில் ஹமாஸ், சௌதியிடம் முறையிட்டிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்திருப்பார்கள் இவ்வளவு அழிவு உண்டாகியிருக்காது சவுதியும் யுஏஇ இரண்டுமே இந்த போரை நிறுத்த வல்லவர்கள் ஈரானுக்கு ஹமாஸுக்கு உதவி செய்வது முக்கியமல்ல இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்கணும் அவ்வளவே அதற்கு ஹமாஸும் ஹெஸ்பொல்லாஹ்வும் வகையாய் அமைந்தார்கள் ஆக்கமாய் எதுவும் சிந்திக்க வக்கற்றவர்கள்


Anand
ஏப் 27, 2024 17:28

அடித்து துவம்சமாக்குங்கள் மூர்க்கம் ஒழியட்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை