உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒமனில் எண்ணெய் டேங்கர் கவிழந்த சம்பவத்தில் 9 பேர் மீட்பு

ஒமனில் எண்ணெய் டேங்கர் கவிழந்த சம்பவத்தில் 9 பேர் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மஸ்கட்: ஓமன் கடலில் டுக்ம் துறைமுகத்திற்கு சென்ற கப்பலில் இருந்து எண்ணெய் டேங்கர் கவிழ்ந்த சம்பவத்தில் கப்பலில் 8 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுக்ம் துறைமுகம் அமைந்துள்ளது. இது அந்த நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் சார்ந்த முக்கிய அங்கமாக திகழ்கிறது. ராஸ் மத்ரகாவில் இருந்து கிளம்பிய 'பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற கப்பல், இந்த துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தது. துறைமுகத்திற்கு அருகே, கப்பலில் இருந்த எண்ணெய் டேங்கர், கடலில் தலைகீழாக கவிழ்ந்தது.இதில் எண்ணெய் டேங்கரில் பணியாற்றிய இந்தியர்கள் 13 பேர், இலங்கையை சேர்ந்த 3 பேர் என 16 பேர் மாயமாகினர். மாயமானவர்களை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் தேடுடி வந்த நிலையில், தற்போது 8 இந்தியர்கள் மற்றொருவர் என 9 பேர் மீட்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ