உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி பேச்சுக்கு அமெரிக்கா பதில்

மோடி பேச்சுக்கு அமெரிக்கா பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி :பயங்கரவாதிகளை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று தாக்கி அழிப்போம் என, பிரதமர் மோடி கூறியுள்ளதற்கு, அமெரிக்கா பதிலளித்துள்ளது.சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை சகித்து கொள்ள மாட்டோம். பயங்கரவாதிகளை அவர்களுடைய வீட்டுக்கே சென்று அழிப்போம் என, கூறினார்.பா.ஜ., மூத்த தலைவரும் ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங்கும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை கொல்வதற்கு இந்தியா முயற்சித்ததாக சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளதாவது:இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு சுமுக பேச்சின் வாயிலாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பிரச்னைகள் தீவிரமாவதை தடுக்க வேண்டும்.இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், பேச்சு நடத்தி தீர்வு காணும்படி இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகிறோம்.பயங்கரவாதி பன்னுானை கொலை செய்வதற்கு நடந்த முயற்சி தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

rim jhim
ஏப் 18, 2024 18:26

When did he spk truth?since years what they donegameof throne OR game of election?


Mohan
ஏப் 18, 2024 14:27

அமெரிக்க வீர்கள் பாகிஸ்தானின் அனுமதியின்றி உள்ளே நுழைந்து ஒசாமா பின் லேடனை போட்டுத்தள்ளுவதை நேரலையில் பார்த்து அமெரிக்க அதிபர் ஒபாமா கை தட்டி பாராட்டியதை உலகமே பார்த்தது இந்தியாவுக்கு அடிபட்டால் அது """தக்காளி சட்னி""- அதே அமெரிக்காவுக்கு வந்தால் """ரெத்தம்""" இந்த மனநிலையில் அமெரிக்கா """இந்&தியாவுக்கு""" அட்வைஸ் செய்வது மடமை


அசோகன்
ஏப் 18, 2024 11:46

தம்பி காமெடி பண்ணாம அப்படி ஓரமா போய் உட்கரு....... உக்ரைன் இஸ்ரேல் போறிலேயே நீ ஆட்டம் கண்டு கிடப்பது உலகிற்கே தெரியும்....... அதெப்படி நீ பின்லேடனை பாகிஸ்தான் உள்ள பூந்து அடிக்கலாம் ஆனா நாங்க மட்டும் கைகட்டி நிக்கணுமா....... அதெல்லாம் 10 வருஷத்திற்கு முன் இப்போ எங்க மோடி இருக்கார்........பாத்து பேசு ராசா


veeramani
ஏப் 18, 2024 09:27

முதலில் இந்தியர்களினுக்கு கருத்து சொல்லுவதை நிறுத்து


SRINIVASARAGHAVAN.S
ஏப் 18, 2024 09:20

மிகவும் உண்மை


sureshpramanathan
ஏப் 18, 2024 08:10

Americans are slime idiots When they go to Pakistan to kill Bin Laden or weapons of mass destruction Sadaamn Hussain then it's ok When giving asylum to terrorists in USA And Canada they made mistakes Now asking India not to target terrorists how come We Donot have to listen to them We do what is right for India


Thiruvengadam Ponnurangam
ஏப் 18, 2024 06:33

உங்கள அடிச்சா நீங்க மொத்த ரானுவத்தையும் களமிறக்கி சம்பந்தமில்லாத ஆட்கள சொல்லுவீங்க ஆனா நாங்க பேச்சு வார்த்தை நடத்தும் அந்த காலம் மலை ஏறி ௧௦ வருசம் ஆச்சி போயி பொண்டாட்டி புள்ளை களை கவனிக்கிற வேலைய பாரு எங்கள் பிரதமருக்கு தெரியும் தேசத்தை காப்பது எப்படி என்று


SRINIVASARAGHAVAN.S
ஏப் 18, 2024 09:21

பலே சரியான பதில் அளித்தீர்கள்


Cheran Perumal
ஏப் 18, 2024 02:12

சும்மா உதார் விடாமல் பொருளாதார நடவடிக்கை எடுத்துத்தான் பாருங்களேன் அப்புறம் பாதிக்கப்படப்போவது நீங்கள்தான்


sankaranarayanan
ஏப் 18, 2024 01:04

காலிஸ்தான் தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததே தவறு இதை உணராமல் மட்றவர்களை சீண்டுவது மிக மிக அக்கிரமம் இவர்கள் அந்நிய நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் அது தவறல்ல ஆனால் உலகிலேயே ஒரு பெரிய ஜனநாயக ஆட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழ்ச்சி காரனுக்கு இங்கே அடைக்கலம் என்னடா இந்த அரசு


Barakat Ali
ஏப் 17, 2024 22:13

பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகப் புளுகி, ஈராக்கில் எப்படி புகுந்தீர்கள் ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை