உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்

பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்

வாஷிங்டன் : அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய முயன்ற வழக்கு தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர், செக் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.அமெரிக்காவில் வசித்து வரும் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுானை கொலை செய்ய முயற்சி நடந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில், இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், இதை மத்திய அரசு மறுத்தது. அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுஇருந்தது.வெளிநாடுகளில் உளவுப் பணிகளை மேற்கொள்ளும், 'ரா' அமைப்பைச் சேர்ந்த விக்ரம் யாதவ் என்ற அதிகாரி, இந்த கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பதாகவும், இதற்கு, ரா அமைப்பு தலைவர் சாவந்த் கோயல் ஒப்புதல் அளித்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.ரா அதிகாரிக்காக, ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வசித்து வரும் நிகில் குப்தா, 52, இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாகவும், அதற்காக பணம் கொடுத்து ஆட்களை தயார் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.இதையடுத்து நிகில் குப்தா, செக் குடியரசில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று, நிகில் குப்தாவை நாடு கடத்தும் வழக்கு, செக் குடியரசு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அவரை நாடு கடத்த செக் குடியரசு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நிகில் குப்தா, அமெரிக்காவுக்கு நேற்று நாடு கடத்தப்பட்டதாகவும், புரூக்ளினில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

N Sasikumar Yadhav
ஜூன் 18, 2024 05:51

ஆக பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் என உர்ஜிதமாகிறது


ThamizhMagan
ஜூன் 18, 2024 20:03

பயங்கரவாதி என்று நீங்கள் சொல்வதால், ஒருவர் பயங்கரவாதி ஆகி விட மாட்டார். பண்ணுன் மீது இந்திய அரசாங்கம் கோர்ட்டில் குற்றச்சாட்டு வைத்து அவரை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளதா? இல்லை.


sankaranarayanan
ஜூன் 18, 2024 05:50

இதுபோன்று அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைக்குமா என்ற கேள்வி எழுகிறதே


ThamizhMagan
ஜூன் 18, 2024 20:05

இந்தியா அமெரிக்காவிடம் பண்ணூனை extradite பண்ண கேட்டுள்ளதா? இல்லையே


sankaranarayanan
ஜூன் 18, 2024 02:02

இதுபோன்றே பயங்கரவாதி பண்ணுவாய் அமெரிக்க இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதிக்குமா தனக்கு ஒரு சட்டம் இவர்களுக்கு ஒரு சட்டம் என்னடா சட்டம்


naranan
ஜூன் 18, 2024 00:47

இதெல்லாம் ஒரு பெரிய செய்தியா? தீவிரவாத இயக்கங்கள் யாராக இருந்தாலும் அவை அழிக்கப்பட வேண்டும் .


ThamizhMagan
ஜூன் 18, 2024 20:09

இந்திய அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் பெரிய செய்தி இல்லையா? ஹா, ஹா, ஹா


ThamizhMagan
ஜூன் 18, 2024 00:33

"நாடு கடத்தல்" என்று சொல்வது சரியான மொழி மாற்றம் இல்லை. சட்ட ரீதியாக ஒருவரை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விசாரணைக்காக கொண்டு செல்வது extradite வேறு, சட்ட விரோதமாக ransom அல்லது பிளாக்மெயில் செய்ய தனிப்பட்டவர்கள் நாடு கடத்துவது kidnap வேறு.


ThamizhMagan
ஜூன் 18, 2024 20:16

Extradition - ஒப்படைத்தல், சட்ட ரீதியான ஒப்படைப்பு. Kidnap - ஆள் கடத்தல்.


Bala Paddy
ஜூன் 18, 2024 00:28

இதற்காகவே பைடன் தோற்க வேண்டும்.


subramanian
ஜூன் 18, 2024 11:39

எவன் வந்தாலும் இதே போல தான் செய்வான்


ThamizhMagan
ஜூன் 18, 2024 20:21

Biden -க்கும் கோர்ட்டின் சட்ட நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. Biden -ன் மகனே குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பு சொல்லியுள்ளது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி