உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நடுநிலையான வெளியுறவுக்கொள்கை; இலங்கை அதிபர் அனுரா திட்டவட்டம்!

நடுநிலையான வெளியுறவுக்கொள்கை; இலங்கை அதிபர் அனுரா திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: 'இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க நடுநிலையான வெளியுறவுக்கொள்கை அவசியம்' என இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்தார்.இலங்கை அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே, 56, அந்நாட்டின் அதிபராக நேற்று பதவியேற்றார். அவரது அரசு, சீனா, இந்தியா என எந்த நாட்டுடனும் அணி சேராமல் இருக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஊடக பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: புவி அரசியல் போட்டியில் இருந்து விலகி, சமநிலையை பேணவே அரசு விரும்புகிறது. புவி அரசியலில் நாங்கள் ஒரு போட்டியாளராக இருக்க மாட்டோம். இந்தியா, சீனா இடையிலான போட்டியில் எந்த தரப்புடனும் இணைந்திருக்க நாங்கள் விரும்பவில்லை. இரு நாடுகளுமே எங்களது மதிப்புக்குரிய நண்பர்கள் தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aswhywyr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இறையாண்மை

இருவருமே எங்களது நெருங்கிய பங்குதாரர்களாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.எந்த நாட்டிற்கும் எதிராக இருக்க மாட்டோம். நாங்கள் ஐரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுடன் உறவுகளைப் பேண விரும்புகிறோம். அதிகரித்துவரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நடுநிலையான வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை அவசியமானது.உலக வல்லரசு நாடுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியில் இலங்கை ஒருபோதும் ஈடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அசோகா
செப் 25, 2024 07:07

சீனா காரனுக்கு ....விட இலங்கை தயார்-னு சொல்கிறாரோ


Rajah
செப் 24, 2024 19:03

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தவறு. ஆனால் இதை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்தது. அதன் விளைவுதான் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வருவதற்கு முக்கிய காரணம். விடுதலைப் புலிகளை காரணம் காட்டி தவறை மறைக்க வேண்டாம். அன்றைய இந்திய அரசு நினைத்திருந்தால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம் அதே சமயம் இலங்கை அரசோடு நல்லுறவிலும் இருந்திருக்கலாம். அதற்கு நல்ல தலைவர்கள் இருந்திருக்க வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கவாதிகளுக்கு உதவி செய்தால் அதை தவறு ன்று சொல்வீர்களா அல்லது நியாப்படுத்துவீர்களா? புள்ளி கூட்டணி அதை நியாயப்படுத்தும். ஆனால் தாய் நாட்டை நேசிப்பவர்கள் நியாயப்படுத்த மாட்டார்கள். கம்யூனிஸ்ட்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள் கெட்டவர்களும் இருக்கின்றார்கள்.இது வன்னி அரசின் கண்டு பிடிப்பு. மீண்டும் இலங்கைத் தமிழர்களை உசுப்பேத்தி அவர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு ஆசைப்பட்டு இலங்கையின் புதிய அரசையம் தமிழர்களை வெறுக்கச் செய்யாதீர்கள். தமிழக அரசியல்வாதிகள் வாய்மூடி இருந்தாலே ஓரளவுக்கு தமிழர்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்.


kulandai kannan
செப் 24, 2024 18:54

தமிழகத்துப் பிரிவினைவாதிகளின் தனி ஈழக் கனவுக்கு நன்றாக வெந்நீர் ஊற்றுவார்.


skrisnagmailcom
செப் 24, 2024 16:46

சீனா ஒரு நாட்டுக்கு உதவினால் அதில் உள் நோக்கம் இருக்கும் ச


Ms Mahadevan Mahadevan
செப் 24, 2024 15:12

ஆரம்பிக்கும்போது நல்லாத்தான் ஆரம்பிக்கிறார்கள். பின்னாடி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகாமல் இருந்தால் சரி


ஆரூர் ரங்
செப் 24, 2024 15:12

தீயமுக எம்பியின் 27000 கோடி யை என்ன செய்யப் போறீங்க? வரும் ஆனா வராதா?


J.Isaac
செப் 24, 2024 17:52

இப்படி புலம்பி புலம்பியே ஹார்ட் அட்டாக் வரப்போபுது


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 24, 2024 14:57

முதலில் என்டிரி தரும் போது இது போல் எல்லாம் பேசினால் தானே உலக நாடுகள் கவனம் ஈர்க்க முடியும். போகப் போக கொஞ்சம் கொஞ்சம் இனம் இனத்தோடு சேர்ந்துவிடும்.


நிக்கோல்தாம்சன்
செப் 24, 2024 14:54

இது மாதிரி ஏற்கனவே நேபாளம் , மாலத்தீவு எல்லாம் சொல்லிட்டு இரவில் அவர்கள் வீட்டு பெண்களை சீனாவிற்கு அழைத்து போனதை பார்த்துள்ளோம் adk , இதுதான் கம்யூனிச சித்தாந்தமோ?


Kumar Kumzi
செப் 24, 2024 14:49

இந்தியாவின் உதவிக்காக தாஜா பண்ணுறான்


Narayanan
செப் 24, 2024 14:47

தங்களின் நடுநிலையான கொள்கைக்கு வரவேற்பு அளிக்கும் அதே நேரத்தில் உங்கள் நாட்டில் வாழும் எங்கள் தமிழ் சமுதாயத்திற்கும் நடுநிலை வகுத்து அமைதியான சூழலை உருவாக்குங்கள் . மேலும் எங்களது மீனவர்கள் கடல் எல்லையை கடந்து தவறி வரும் நேரத்தில் திருப்பி அனுப்புங்கள் . படகை பிடித்து வைத்துக்கொள்ளாதீர்கள். கடல் எல்லை என்பது சரியாக வரையறுக்க முடியாது . நட்பு தொடரட்டும் . வளத்துடன் வாழ்க .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை