உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பைக் கொல்ல திட்டம் தீட்டிய ஈரான்; அம்பலப்படுத்தியது அமெரிக்கா!

டிரம்பைக் கொல்ல திட்டம் தீட்டிய ஈரான்; அம்பலப்படுத்தியது அமெரிக்கா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, 2வது முறையாக அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். பிரசார களத்தில் கடும் நெருக்கடியை சந்தித்த தருணத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசாரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது பறந்த வந்த தோட்டா, டிரம்ப் காதில் மேல்பகுதியை உரசிச் செல்ல ஒரு கணம் ஆதரவாளர்கள் அதிர்ந்து போயினர். அதன் பின்னர் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதான கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது, மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அப்போதும் டிரம்ப் உயிர் தப்பினார். இந்த சம்பவம், அமெரிக்க வாக்காளர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கா நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் துணை ராணுவ குழுவின் ஒரு உறுப்பினர் டிரம்பை கண்காணித்து, கொல்ல முயற்சி செய்துள்ளார். ஈரானை வெளிப்படையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரைக் கொல்ல முயற்சி செய்துள்ளனர். இது குறித்து இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கா மக்களையும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்ந்த முயற்சி நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நீண்ட கால எதிரியாக இருந்து வரும் ஈரான், கடந்த முறை டிரம்ப் ஆட்சியின் போது பல நெருக்கடிகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து அமெரிக்கா வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் கூறியதாவது: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஈரான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈரான் அரசால் இயக்கப்படும் சிலர் அமெரிக்கா மண்ணிலும் வெளிநாட்டிலும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் உட்பட எங்கள் குடிமக்களை தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் . இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Dhurvesh
நவ 09, 2024 13:10

CREAT பண்ணுவதில் மினஜிவிடுவார் போல


raja
நவ 09, 2024 11:29

மலேரியா டெங்கு கொசுக்களை போல ஒழிக்க வேண்டியது குண்டுவைத்து அப்பாவிகளை கொல்லும் முஸ்லிம் தீவிரவாதிகளை அன்றி சனாதனத்தை அல்ல மிஸ்டர் சின்ன தத்தி...


GMM
நவ 09, 2024 11:14

இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள் ஒரு பக்க வாதம் ஏற்று, போலி மனித உரிமை, மத சார்பின்மைக்கு பொருள் புரியாமல் சிக்கி தவிக்கும் நாடுகள். முறை படுத்தவில்லை என்றால், இஸ்லாம் பரவல் மிக வேகம் எடுக்கும். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உலகின் பெரும்பகுதி மத மாறிவிடும். மத மாற்ற சட்டம் உலகம் அமுல்படுத்த வேண்டிய அவசியம். இடம் பெயரும் இடங்களில் மத உரிமை மட்டுப்படுத்த வேண்டும். எங்கும் தொழுகைக்கு சலுகை. பின் ஏன் இந்தியா எங்கும் புதிய புதிய மசூதிகள். ? ஈரான் நாடே டிரம் கொலைக்கு திட்டம்? எராள மத தீவிரவாத இயக்கம்? அம்பலப்படுத்தும் போது, மக்கள் பாதுகாப்பு சட்டத்தை அமுல் படுத்துவது நல்லது.


பொதுவாளன்
நவ 09, 2024 10:45

இண்டர்நேஷனல் விதிமுறைகளை மீறி இரானிய தளபதி சுலைமானை ட்ரோன் மூலம் குண்டு வீசிக் கொன்றவர் ட்ரம்ப். இது பொலிட்டிகல் அசாசினேஷன் வகையைச் சார்ந்தது. இதை இரான் மறக்காது. அதற்கு அழி வாங்கவே இத்தகைய கொலை முயற்சிகள்.


Sakthi,sivagangai
நவ 09, 2024 13:19

நீ பொதுவாளர் அல்ல டிக்கி தங்கம், போலி பேர்ல இருக்க


Perumal Pillai
நவ 09, 2024 10:35

Eliminate the Supreme Terrorist. Then everything will be OK.


Rajah
நவ 09, 2024 10:35

இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போது சிரித்தார்கள். காசாவில் மக்கள் மடியும் போது அழுகின்றார்கள்.


Kasimani Baskaran
நவ 09, 2024 10:27

ஏற்கனவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் விரைவில் சிக்கலை எதிர்நோக்கும் என்றுதான் தோன்றுகிறது. பலமான எதிரியை தேவையில்லாமல் சீண்டுவது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போல என்பதை புரியாமல் தவறு செய்து விட்டார்கள்.


ராமகிருஷ்ணன்
நவ 09, 2024 09:05

அப்போ இஸ்ரேலை வச்சு ஈரானை ஒழித்து கட்டி விடுவார். . உலகப்போரை ஆரம்பித்து விடுவார்கள்


தமிழ்வேள்
நவ 09, 2024 09:04

கும்பலை அடியோடு அழித்தால் தீவிரவாத போதனைகள் குறையும்...தடை செய்து ஒழிப்பது எதிர் காலத்துக்கு நல்லது


ஆரூர் ரங்
நவ 09, 2024 08:45

இதே வேகத்தை காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுவை தண்டிப்பதிலும் காட்டட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை