உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும்: உலக வங்கி கணிப்பு

வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும்: உலக வங்கி கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பொருளாதாரம் வலுவான உள்நாட்டுத் தேவையாலும், முதலீடுகளின் எழுச்சி மற்றும் வலுவான சேவை நடவடிக்கைகளாலும் உற்சாகம் அடைந்துள்ளது. இந்தியாவின் ஜி.டிபி., வலுவான வளர்ச்சி அடையும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். 2025ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும். 2024ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை ஒரு நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதம் வளரும். தனியார் முதலீட்டுடன் வலுவான பொது முதலீடு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 12, 2024 21:20

இந்த நல்ல செய்தி, காங்கிரஸ், திமுக போன்ற தேசதுரோக கட்சியினருக்கு மிகவும் வருத்தமளிக்கும். அவர்கள் எண்ணமே, நம் பாரத நாடு வளர்ச்சி அடையவே கூடாது. அவர்கள் மட்டும் ஊரை அழித்து வளரவேண்டும்.


R SRINIVASAN
ஜூன் 12, 2024 17:55

இந்தியாவின் வணிகம் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கிறது மோடி அவர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார் நம் நாட்டு மக்களுக்கு GST என்றால் என்னவென்றே தெரியவில்லை.இங்கு குறை கூறுபவர்கள் அடித்தட்டு மக்களிடம் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி உயர்ந்தது என்பதை எடுத்துக்கூறி புரியாவையுங்கள் பக்கத்துக்கு நாடான பாக்கிஸ்தான் சோற்றுக்கு இல்லாமல் தவிக்கிறது மோடி அவர்கள் இந்தியன் கர்ரன்சியில் ரஷ்யாவிடமிருந்து ஆயில் வாங்கியது ஆனால் காங்கிரெஸ்ஸோ டாலர் கணக்கில் அரேபியா நாடுகளிடமிருந்து ஆயிலை வாங்கி இந்தியாவை கடனளி ஆக்கியது


Apposthalan samlin
ஜூன் 12, 2024 13:42

என்ன பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து என்ன பிரயோஜனம்? விலை வாசி விண்ணை தொட்டு உள்ளது மொனொரு காலத்தில் பெட்ரோல் டீசல் மட்டும் தான் விலை கொஞ்ச அதிகம் 5000 வைத்து ஒரு குடும்பத்தை ஓட்டி விடலாம் இப்பொழுது 20000 இருந்தாலும் பத்த மாட்டேன்கிறது.சேமிப்பு ஸிரோ இப்பொழுது. அடுத்து வேலை இல்லா திண்டாட்டம் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து என்ன ஆக போகுது ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை