உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

2வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அபிஷேக் சர்மா சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க, சுப்மன் கில் 2வது ஓவரில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அபிஷேக் சர்மா சதம்

அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்திருந்தார். மேயர்ஸ் வீசிய 11வது ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்களை அபிஷேக் சர்மா விளாசினார். இதன் மூலமாக 33 பந்துகளில் அரைசதம் அடிக்க, சிக்கந்தர் ராசா வீசிய 13வது ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டது. அப்போது அபிஷேக் சர்மா 82 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மசகட்ஷா வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து 46 பந்துகளில் தனது முதல் சதத்தை எட்டினார்.அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 38 பந்துகளில் அரைசதத்தை எட்ட, சட்டாரா வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 20 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 197 ரன்களாக இருந்தது.இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களும் விளாசினர். கடைசி 10 ஓவர்களில் 160 ரன்கள் குவிக்கப்பட்டது. 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இந்திய அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் முகேஷ் சர்மா, அவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை