உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சதி: பிரபல பாடகி நிகழ்ச்சி ரத்து

ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சதி: பிரபல பாடகி நிகழ்ச்சி ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வியன்னா: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட். ஆஸ்திரியாவின் வியன்னாவில் நேற்று துவங்கி, மூன்று நாட்களுக்கு இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார்.இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த தகவல் வெளியானது அதனால், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=68xe6gds&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, ஆஸ்திரியாவைச் சேர்ந்த 19 மற்றும் 17 வயது இளைஞர்கள் இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்பாக போலீசார் கூறியுள்ளதாவது:இந்த இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள். டெய்லர் ஸ்விப்ட் நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் பங்கேற்பர் என்பதால், அதில் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை கொல்ல முடியுமோ, அத்தனை பேரை கொல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.அவர்களுடைய வீடுகளில் இருந்து, ஐ.எஸ்., அமைப்பு தொடர்பான ஆவணங்கள், வெடி பொருட்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஆக 09, 2024 08:40

சிரியாவில் இருந்து மார்கத்தினர்களை வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியதன் நோக்கமே இனப்பெருக்கம் மூலம் ஆக்கிரமித்து அதன் பின் அந்த நாடுகளையும் மார்க்கத்தின் பிடியில் கொண்டு வந்து விடவேண்டும் என்பதுதான். இப்பொழுதே பலர் வாக்களிக்கும் வயதுக்கு வந்துவிட்டார்கள். பல இடங்களில் சிறுபான்மையினர் ஆதரவு இல்லாமல் ஜெயிக்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. இனி நன்றாக விளையாட்டுக்காட்டி அந்தந்த நாடுகளை வீழ்ச்சியடையச்செய்வார்கள்.


Rpalnivelu
ஆக 09, 2024 01:25

பயங்கரவாதத்தின் மீது மிதமான போக்கு மிக ஆபத்தானது என்று மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ளவில்லை.


Senthoora
ஆக 09, 2024 08:00

மேற்கத்திய நாடுகளில் பயங்கரவாதிகள் வேறு நாடுகளில் இருந்துதான் வருகிறார்கள், நம்ம நாட்டில் உள்ளுக்குள் கருப்பு ஆடுகள் இருக்கிறது. பணம்வாங்கி இந்த கொடுமைகளை செய்யுது.


Amruta Putran
ஆக 09, 2024 01:15

Peaceful Jihadi religion


மேலும் செய்திகள்









புதிய வீடியோ