மேலும் செய்திகள்
பிரதமர் மோடிக்கு பார்படாஸ் அரசு விருது
08-Mar-2025
போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருதை, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் அறிவித்துள்ளார்.கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, 'த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப் த இந்தியன் ஓஷன்' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு வழங்குவதாக, அந்த நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் நேற்று அறிவித்தார். இந்தியா, மொரீஷியஸ் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஆற்றிய பெரும் பங்குக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் மோடி. மேலும், இந்த விருதைப் பெறும் ஐந்தாவது உலகத் தலைவராகவும் அவர் விளங்குகிறார். இதன் வாயிலாக, பிரதமர் மோடி, 21வது சர்வதேச கவுரவ விருதைப் பெற உள்ளார்.முன்னதாக நேற்று காலை மொரீஷியசின் போர்ட் லூயிஸ் சென்றடைந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவருக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பீஹாரின் பாரம்பரிய, 'கீத் கவாய்' எனப்படும் போஜ்புரி இசை, பாடல்களுடன், அங்குள்ள இந்தியப் பெண்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அந்த நாட்டின் பிரதமர் நவின் சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார்.அந்த நாட்டின் துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, பார்லிமென்ட் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் என, 200க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.அந்த நாட்டின் அதிபர் தரம் கோகுலை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதிபர் மாளிகையில், மோடிக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அவருடன் இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து மோடி பேசினார்.சிறப்பு நிகழ்வாக, வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கும், ஓ.சி.ஐ., வெளிநாட்டு இந்தியர் என்ற அட்டையை, அதிபர் கோகுல், அவருடைய மனைவி விருந்தா கோகுலுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.இதைத் தவிர, சமீபத்தில் நடந்த மஹா கும்பமேளாவை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய பித்தளை மற்றும் செம்பால் செய்யப்பட்ட குடுவையை வழங்கினார். பீஹாரின் புகழ்பெற்ற, அதிக சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருளான மக்கானாவையும் வழங்கினார்.குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கைவினை வேலைப்பாடுகள் அடங்கிய சடேலி பெட்டியில், வாரணாசியில் தயாரிக்கப்பட்ட பனாரஸ் பட்டுச் சேலையை, அதிபரின் மனைவிக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.அதிபர் மாளிகையில் அமைந்துள்ள ஆயுர்வேத பூங்காவை மோடி சுற்றி பார்த்தார். இந்த பூங்காவை அமைத்ததற்காக அதிபர் கோகுலுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.மொரீஷியஸ் பிரதமர் நவின் ராமகூலம் மற்றும் அவருடைய மனைவி வீணா ராமகூலத்துக்கு, ஓ.சி.ஐ., கார்டுகளை வழங்குவதாக மோடி அறிவித்தார்.ஓ.சி.ஐ., கார்டு வைத்துள்ளோருக்கு, இந்தியாவில் வசிக்க, வேலை பார்க்க, படிக்க உரிமை வழங்குகிறது. மேலும், விசா இல்லாத பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது. மொரீஷியஸ் நாட்டில், 22,188 இந்தியர்கள் உள்ளனர். அதில், 13,198 பேருக்கு ஓ.சி.ஐ., கார்டு வழங்கப்பட்டுள்ளது.மொரீஷியசின் நிறுவன தந்தையாக போற்றப்படும் சர் சீவோசாகுர் ராமகூலம் மற்றும் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மற்றும் பிரதமராக பணியாற்றிய மறைந்த அனிருத் ஜூகன்னாத் ஆகியோரின் சமாதிகளில் மலர்வளையும் வைத்து மோடி அஞ்சலி செலுத்தினார்.
08-Mar-2025