உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி வருகை முக்கியம்: ரஷ்யா ஆர்வம்

இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி வருகை முக்கியம்: ரஷ்யா ஆர்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 'இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம்' என ரஷ்யா செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில் நாளை (ஜூலை 08) மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி, இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இரு நாட்டு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள் குறித்தும் புடினுடன் ஆலோசனை நடத்தும் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

மோடி வருகை

'இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம். ரஷ்ய அதிகாரிகளுடனான இந்தியப் பிரதமரின் சந்திப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்' என ரஷ்யா செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

41 ஆண்டுகளுக்கு பின்..!

ஜூலை 9ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார். 41 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரியா செல்லும் முதல் பிரதமர், நரேந்திர மோடி ஆவார். அங்கிருந்து ஜூலை 10ம் தேதி பிரதமர் தாயகம் கிளம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாபுராவ்
ஜூலை 08, 2024 12:46

இப்போ இருதரப்பு உறவில் என்ன கெட்டு போச்சு? ஆயில் வாங்கி 36000 கோடி சேமிச்சிருக்கோம். அவிங்க நம்ம கிட்டேயிருந்து டீ, காபி, தளவாடம் வாங்கறாங்க.


P. VENKATESH RAJA
ஜூலை 07, 2024 19:29

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி