உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இங்கிலாந்து விமான நிலையத்தில் மின்சாரம் "கட்": பயணிகள் அவதி

இங்கிலாந்து விமான நிலையத்தில் மின்சாரம் "கட்": பயணிகள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: இங்கிலாந்து விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் அவதி அடைந்தனர். விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.இங்கிலாந்து மான்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 23) முதலாம், இரண்டாம் முனையங்களில் மின்சாரம் தடைபட்டது. அதனால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அங்கு தரையிறங்க வேண்டிய சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டன. மின் தடை காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர். மூன்றாம் முனையத்திலிருந்து பயணம் செய்யவிருப்போர் நிலையத்திற்கு வழக்கம்போல் வரலாம் எனக் கூறப்பட்டது. காத்திருக்கும் பயணிகளின் விமானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்போது தான் கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என விமான நிலையம் அறிக்கை வெளியிட்டது. பயணிகள் விமான நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி, அவதியடையும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R KUMAR
ஜூன் 24, 2024 13:18

நமக்கு அண்ணன்தான் அங்கும் ஆளுகிறார்கள். எனவே வாசம் அடித்துவிட்டது போலும்


ரவீன்
ஜூன் 24, 2024 12:46

இந்திய வம்சாவளி பிரதமர். இந்தியா மாதிரி ஆக்காம உடமாட்டாரு.


Sathiya Arunachalam
ஜூன் 24, 2024 12:26

Once upon a time, The Royal Nation when compare with other countries... Really time changes everything.... So regret for this incident.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 12:16

மோடியின் வளர்ந்த இந்தியா மட்டும் எப்படியாம் ???? ஒரு உ பீயி ன் சாட்டையடிக்கேள்வி ...


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 12:15

நம்மை ஆண்டவங்க நெலம இப்படியா ஆகணும் ????


அதெல்லாம் முடியாது
ஜூன் 24, 2024 11:40

இதற்கு பெறுபேற்று ஒன்றிய மோடி அரசு பதவி விலக வேண்டும்


Nermaiyanavan
ஜூன் 24, 2024 14:26

அப்போ ஜப்பான் துணை பிரதமர் என்ன செய்யணும்?


Balaji Gopalan
ஜூன் 24, 2024 11:38

ஏன் அப்பு நம்ம அணிலார் சொந்தகாரங்க யாராவது அங்கு அமைச்சரா இருக்காங்களாப்பு. சும்மா கேட்டு வெப்போம் அம்புட்டுதேன்


Sampath Kumar
ஜூன் 24, 2024 11:29

சென்னை விமான நிலையத்திற்கு வந்து போய் இருக்கனும் இங்கிலாந்து கர்னலாக அது தான் பழக்க தோஷம் ஒட்டிக்கிச்சு


S. Gopalakrishnan
ஜூன் 24, 2024 11:18

இங்கிலாந்து ஆப்கானிஸ்தானாக மாறி வருகிறது. இனி இதெல்லாம் சகஜமாக நடக்கும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி