உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாணவர் போராட்டம்: வங்கதேசத்தில் சமூக வலைதளங்களுக்கு மீண்டும் தடை

மாணவர் போராட்டம்: வங்கதேசத்தில் சமூக வலைதளங்களுக்கு மீண்டும் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச நாட்டில் மீண்டும் மாணவர் போராட்டம் வதந்தி பரவியதால் வன்முறை சம்பவங்களை தவிர்க்க சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டு, 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 1000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ராணுவம் ரோந்து வருகிறது.இதையடுத்து கடந்த ஜூலை 18-ம் தேதி சமூகவலைதளங்களுக்கு நாடு முழுதும் தடை விதிக்கப்பட்டு பின் விலக்கி கொள்ளப்பட்டது.இந்நிலையில் மீண்டும் மாணவர் போராட்டம் நடைபெற உள்ளதாக பரவிய வதந்தியால் இன்று (02.08.2024) வங்கதேச அரசு பிறப்பித்த உத்தரவில், டெலிகிராம், பேஸ்புக், யூடியுப், வாட்ஸ் ஆப், எக்ஸ், டிக்டாக்,. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krish_SI
ஆக 02, 2024 23:44

அப்படி சுத்தந்திர போராட்டவீரர்கள் வாரிசுக்களுக்கு இல்லை எனில் எவர்கும் இருக்கக்கூடாது


Ramesh Sargam
ஆக 02, 2024 20:17

மேற்குவங்க முதல்வர் மமதா மிகவும் வேதனை அடைந்திருப்பாரே...??


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை