உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் நிதி :அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் நிதி :அமெரிக்கா அறிவிப்பு

கீவ்: போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு திட்டங்களுக்கு 700 மில்லியன் டாலரை அமெரிக்கா நிதியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.ரஷ்யா -உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. எனினும் அவ்வப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் சென்றார். கீவ் நகரில் அமைச்சர்கள் , அதிகாரிகளை சந்தித்து பேசினார்.இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம் , கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதி வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rpalnivelu
செப் 12, 2024 14:53

பாரத பிரதமர் மோடி தன் சக்தியையும் மீறி ரஷிய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நாசகாரனோ எறியும் தணலில் எண்ணெய் ஊற்றுகிறான்


நிக்கோல்தாம்சன்
செப் 12, 2024 07:36

கடன் என்பதனை நிதி என்று அறிவிப்பதை நிறுத்துங்க


Kasimani Baskaran
செப் 12, 2024 05:44

டிரம்ப் என்ன அவரின் தாத்தா வந்தாலும் அமெரிக்காவை காப்பாற்ற வழியில்லை என்பதை இப்பொழுதே உணர முடிகிறது. சேத வாய்ப்புக்களை வைத்துப்பார்த்தால் டிரம்ப் ஜனாதிபதியாவது உலகுக்கு நல்லது. விரட்டப்பட்டவர்களின் சார்பாக 2026ல் திராவிடர்களுக்கு டப் கொடுக்க கமலா தமிழக பிரதமராக போட்டியிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை