உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வயநாடு நிலச்சரிவு: அமெரிக்க , ரஷ்ய அதிபர்கள் இரங்கல்

வயநாடு நிலச்சரிவு: அமெரிக்க , ரஷ்ய அதிபர்கள் இரங்கல்

வாஷிங்டன்: கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் ரஷ்ய அதிபர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்..கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலைச்சரிவில் சிக்கி 295 பேர்பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ஜில் மற்றும் நானும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சோகமான நிகழ்வில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருபவர்களின் துணிச்சலையும் பாராட்டுகிறோம். இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

கேரள நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை தெரிவிக்கவும் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sundar
ஆக 02, 2024 08:32

இதுநாள்வரை அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் இப்படி ஒன்றாக கூறி பார்த்ததில்லை. நல்ல விஷயம். மோடி effect?


Barakat Ali
ஆக 02, 2024 07:21

வயநாட்டில் மேலும் மதமாற்றம் செய்யச் சரியான தருணம் பைடன் தாத்து .....


Kasimani Baskaran
ஆக 02, 2024 05:41

பேரிடர் வர வாய்ப்பு உண்டு என்று தெரிந்தவுடன் மாநில அரசு பொது மக்களை அந்த இடங்களில் இருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். அதை செய்யாததால் இது போல ஒரு சோகம் நிகழ்ந்து இருக்கிறது. கால நிலை மாற்றத்தால் சென்னைக்கு பல ஆபத்துக்கள் வந்து மறைந்து இருக்கிறது. வெள்ளத்தால் இன்னும் பல பகுதிகளுக்கு அபாயம் உண்டு - ஆனால் மாநில அரசு தூர் வாரும் லட்சணத்தில் அந்த ஆபத்து நிரந்தரமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை இராணுவத்தை வைத்து வேலை செய்தால் தப்பிக்கலாம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ