வாசகர்கள் கருத்துகள் ( 1 )
In case America involve direct war with Russia I assume the North America continent will disappear.
வாஷிங்டன்: ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்கும்படி அமெரிக்காவுக்கு உக்ரைன் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்கா அதிபர், பிரிட்டன் பிரதமர் நேற்று முன்தினம் விவாதித்தனர். வாஷிங்டனில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.'உக்ரைனுக்கு அவ்வாறு அனுமதி அளித்தால், அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதாக எடுத்துக் கொள்வோம்; அதன் விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்க நேரும்' என, புடின் எச்சரித்துள்ளார். 'அது வெற்று மிரட்டல்; ரஷ்யாவால் நம்மை எதுவும் செய்துவிட முடியாது' என பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் அமெரிக்காவை உசுப்பி விடுகின்றன.அமெரிக்காவில் நவம்பர் 5ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. உக்ரைனுக்கு அனுமதி கொடுத்து, அதன் விளைவாக ரஷ்யா தீவிரமாக போரில் இறங்கினால், அதில் மற்ற நாடுகளும் இழுக்கப்பட்டு, மூன்றாவது உலகப் போராக உருவெடுத்தால் என்ன செய்வது என்று, அதிபர் பைடன் கவலைப்படுகிறார். அதிபர் தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், அது போன்ற மிக முக்கியமான முடிவுகள் எதையும் அதிபர் எடுக்கக் கூடாது என்பது மரபாக பின்பற்றப்படுகிறது. மீற பைடன் விரும்பவில்லை.அதே சமயம், உலகமே எதிர்த்தாலும் சரி என்று, அடாவடியாக உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை அடக்க துப்பில்லை என்ற கெட்ட பெயருடன் பதவியை விட்டு போகவும் பைடனுக்கு மனமில்லை. உக்ரைன் கேட்பது போல, நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி கொடுத்தால், ரஷ்யாவை உக்ரைனால் பணிய வைக்க முடியுமா என்ற சந்தேகமும் பைடனுக்கு இருக்கிறது. எனவே தர்மசங்கடத்தில் தவிக்கிறார்.உக்ரைனுக்கு நிதியும், ஆயுதங்களும் கொடுத்து வரும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்படி சந்தேகம் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள். முதலாவது என்னவென்றால், நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய புது ரக ஏவுகணைகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிடம் மட்டுமே இருக்கின்றன. அவற்றை தயாரிக்க நிறைய செலவு பிடித்தது. அதனால், அதிக எண்ணிக்கையில் தயாரிக்கவில்லை. நேரடியாக ஒரு போரில் இறங்க நேரிட்டால், தற்காப்புக்காக பயன்படுத்த தேவையான அளவு மட்டுமே தயாரித்து இருப்பில் வைத்துள்ளன.இரண்டாவது, அந்த ஏவுகணைகளை இயக்கும் தொழில் நுட்ப கட்டமைப்பு உக்ரைன் ராணுவத்திடம் கிடையாது. வானத்தில் கண்கள் என்று சொல்லப்படுகிற, வேவு பார்க்கும் செயற்கை கோள்கள் வழியாக எதிரியின் இலக்குகளை கண்காணித்து, அவற்றின் அசைவுகளுக்கு பொருத்தமாக தாக்குதல் பாதையை துல்லியமாக கணித்து, தரையில் உள்ள கன்ட்ரோல் ரூம் கம்ப்யூட்டர்களுக்கு வழி காட்டிக் கொண்டே இருந்தால் மட்டுமே, குறி தவறாமல் தாக்கி இலக்கை அழிக்க இயலும். ஏவுகணையை உற்பத்தி செய்த நாடுகளின் ராணுவத்தினர் மட்டுமே இதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் உக்ரைன் ராணுவத்துடன் சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கும்.மேலை நாடுகள் உக்ரைனுக்கு நிதியும், சிறிய ஆயுதங்களும் கொடுப்பது வரை பிரச்னையில்லை என்பது, ரஷ்யாவின் நிலைப்பாடு. சிறு ஆயுதங்கள் என்பது எல்லையில் நடக்கும் போரில் மட்டும் பயன்படுத்த கூடியவை. எதிரியின் முன்னேற்றத்தை தடுத்து, தன்னை காப்பாற்றிக் கொள்ள உதவும். அதற்கு மேல் பிரயோசனம் கிடையாது. எல்லையை தாண்டி ரஷ்யாவுக்குள் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ஆயுதங்களை உக்ரைனுக்கு எந்த நாடு வழங்கினாலும், அந்த நாடு ரஷ்யாவுக்கு எதிராக போர் பிரகடனம் செய்ததாகவே கருதுவோம் என, அதிபர் புடின் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.துப்பாக்கியால் சுடுவதும், கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் வழியாக ஏவுகணைக்கு கட்டளைகள் பிறப்பிப்பதும் சமமான போர் நடவடிக்கைகளே என்பதால், ரஷ்யா சும்மா விடாது. நேட்டோ நாடுகளுக்கும் இது தெரியும். அதனால் தான், உக்ரைனின் சுதந்திரத்தை பாதுகாக்க உதவுகிறோமே தவிர, ரஷ்யாவுடன் மோதும் நோக்கமே கிடையாது என, பிரிட்டிஷ் ராணுவ அமைச்சர் ஊடகர்களிடம் சொன்னார்.ரஷ்யாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை, ஒருவராலும் ஊகிக்க முடியவில்லை. அமெரிக்கா ஒருவேளை அனுமதி அளித்து, உக்ரைனும் நீண்ட தூர ஏவுகணைகளை சுட்டால், அவற்றின் தாக்குதலில் இருந்து தப்ப முன்னேற்பாடுகளை அந்நாடு செய்துள்ளது. ஏவுகணையின் பயண வரம்பு 190 மைல் அல்லது 306 கிலோமீட்டர் என்பதால், உக்ரைன் எல்லையில் இருந்து அவ்வளவு துாரத்துக்குள் இருந்த ஆயுத தளங்கள், படை வீரர் முகாம்கள் ஆகியவற்றை அந்த வரம்புக்கு பின்னால் நகர்த்தி விட்டது. மின் உற்பத்தி நிலையம் போன்ற முக்கிய கட்டமைப்புகள் ஏவுகணையின் வீச்சுக்குள் இருந்தாலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இலக்குகள் எதையும் தாக்கக்கூடாது என்பது நேட்டோ அமைப்பின் விதிகளில் ஒன்று.ரஷ்யாவிற்கு சுய கட்டுப்பாடுகள் கிடையாது. ஏற்கனவே அது உக்ரைனில் ஆஸ்பத்திரி உள்ளிட்ட சிவிலியர் டார்கெட்களை குண்டுவீசி அழித்துள்ளது. அதன் கிளைடர்குண்டுகள் உக்ரைனின் வான்வெளி பாதுகாப்பு அரணை சுல பமாக தாண்டிச் செல்லும் ஆற்றல் உடையவை. பார்ப்பதற்கு தொப்பென்று செங்குத்தாக விழுந்து வெடிக்கக்கூடிய குண்டு போல தெரியும். ஆனால், விமானத்தில் இருந்து வீசப்பட்டதும் சிறு சிறகுகள் விரிந்து காற்றில் மிதக்கக் கூடியவை. அப்போது ஜிபிஎஸ் உத வியுடன் தொலைவில் இருந்து இயக்கி, இலக்குகளை நோக்கி ஏவுகணை போலவே செலுத்த முடியும். கிட்டத்தட்ட ட்ரோன் குண்டுகளுக்கு சமம். இதை ரஷ்யா குவித்து வைத்துள்ளது. இது தவிர, ஈரானில் இருந்து ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு சப்ளையா வதை, அமெரிக்க உளவு செயற்கை கோள்கள் கண்டறிந்துள்ளன. அத்துடன், தோழர்களான சீனாவும், வட கொரியாவும் கிடங்கு களில் சும்மா அடுக்கி வைத் திருக்கும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு கொடுக்க, எப்போதும் ரெடி. எல்லாவற்றுக்கும் மேலாக, தேவைப்பட்டால் அணு ஆயுதம் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்று புடின் எச்சரித்திருக்கிறார். அந்தளவுக்கு போக மாட்டார் என நம்புவதற்கு முகாந்திரம் இல்லை .ஏனென்றால், சோவியத் யூனியன் சிதறிய பிறகும், உலகின் இரண்டு மகாவல்லரசுகளில் ஒன்றாக பந்தா காட்டிக் கொண்டிருந்த ரஷ்யா, சின்னஞ்சிறு உக்ரைனை முழுசாக விழுங்க முடியாமல் மூச்சு வாங்கிக் கொண்டிருப்பது அவமானம் என்று, அவர் உணர்ந்திருக்கிறார்.நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, 2022 பிப்ரவரி யில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்த ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா, ஐரோப்பா நிதி, ஆயுத உதவியால் ரஷ்ய ராணுவத்தை உக்ரைன் முடிந்த வரை தடுத்து வருகிறது. இரு தரப்பிலும் இதுவரை நேர்ந்துள்ள இழப்புகள் மிக அதிகம்.பொருளாதார இழப்பு டன் ஒப்பிட்டால், இந்த போரில் மனித உயிர் இழப்பு வழக்கத்தை விட குறைவு தான். ட்ரோன் போன்ற ஆள் இல்லாத ஆயுதங்களை பெருமளவு பயன்படுத்தியது முக்கிய காரணம்.உலகப் போராக மாறினால் உயிர் பலி உச்சம்தொடும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் உலக போரில், 85 லட்சம் வீரர்கள் இறந்தனர். பொது மக்கள் பலி கணக்கு எடுக்கவில்லை. இரண்டாம் உலக போரில் வீரர்களும், மக்களும் சேர்த்து பலி எண்ணிக்கை கோடியை எட்டரை தாண்டியது. அடுத்து வருவது அணு ஆயுத போராக இருந்தால், அழிவை அளந்து சொல்ல ஆள் மிஞ்சுவது கேள்விக் குறி.உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன் களம் இறங்கினால், ரஷ்யாவுக்காக களம் இறங்கும் முதல் நாடு ஈரானாக இருக்கும். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், முகாம்கள் அதன் முதல் இலக்குகளாக அமையும். அந்த சாக்கில் இஸ்ரேலுடனும், அது நேரடியாக போரில் குதிக் கும். அந்த கட்டத்தை எட் டினால், மற்ற நாடுகள் யுத்தச் சுழலில் இழுக்கப்பட தாமதம் ஆகாது.வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளும் விரும்புவது ஒன்று தான்: போர் சீக்கிரம் முடி வுக்கு வர வேண்டும். ஆயு தங்கள் தயாரித்து விற்கும் நிறுவனங்களின் ஆசை மட்டுமே வேறாக இருக்கும்.
In case America involve direct war with Russia I assume the North America continent will disappear.