உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க நிபந்தனைக்கு பணிந்தார் ஜெலன்ஸ்கி

அமெரிக்க நிபந்தனைக்கு பணிந்தார் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட வெள்ளை மாளிகைக்கு நாளை வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்த போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் போரின்போது, முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு, உக்ரைனுக்கு ஆதரவாக இருந்தது; உக்ரைனுக்கு ராணுவ உதவிகளுடன், நிதியுதவியையும் அளித்து வந்தது.இந்நிலையில், அமெரிக்காவின் அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் நிர்வாகம், அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. ரஷ்யாவுடன் நெருக்கத்தை காட்டி வருகிறது. உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்தியுள்ளது.இதற்கிடையே, உக்ரைனில் அரிய வகை கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. உலகின் மொத்த அரிய வகை கனிமங்களில், 5 சதவீதம் அந்த நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, லித்தியம், கிராபைட் உள்ளிட்ட கனிம வளங்கள் அபரிமிதமாக உள்ளன. ராணுவம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்புக்கு இந்த கனிமங்கள் தேவை.கனிம வளங்களை வெட்டி எடுக்கும் குத்தகை தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பேசி வந்தது. ஆனால், அமெரிக்கா பல கடுமையான நிபந்தனைகளை விதித்தது. குறிப்பாக, அரிய வகை கனிமங்கள் வர்த்தகத்தில், 50 சதவீத லாபத்தை அளிக்க வேண்டும் என்று டிரம்ப் நிபந்தனை விதித்தார். அதே நேரத்தில் உக்ரைனுக்கு ராணுவ உதவி தொடர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்கவில்லை.இவ்வாறு பல விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகைக்கு நாளை வருகை தர இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். இதை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தமிழ்வேள்
பிப் 27, 2025 18:44

அரிதாரம் பூசும் நடிகர்கள் மற்றும் அரைக்கிறுக்கு கோமாளிகளை பதவியில் அமர்த்தி அழகுபார்த்த எந்த நாடாவது உருப்பட்டதாக சரித்திரம் உண்டா? கூத்தாடிகள் சகவாசம் குடியை கெடுக்கும்..தமிழகம் போல உக்ரைனின் குடியும் கூத்தாடியால் கெட்டழிந்து போனது...


மகேஷ்
பிப் 27, 2025 17:58

இதுக்கு பருத்தி முட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்


Karthik
பிப் 27, 2025 16:49

அனுபவமில்லாத அரை வேக்காட்டு அரசியல்வியாதி, ஒன்னுக்கும் உதவாத கூத்தாடி மாடல் ஜோக்கரை ஆட்சியில் அமர்தியதால், அந்த நாட்டுமக்கள் உயிரை இழந்து, உடமையை இழந்து, நிம்மதியான வாழ்க்கையை இழந்து, ஒன்னுமில்லாம நிற்கதியான நிலையில்.. அவனோ அந்நாட்டின் இயற்கை வளங்களையும் வாரி கொடுத்து.. இனி அந்த நாட்டையும் கூறுபோட்டு குடுத்துட்டு , அங்கு வாழும் இன மக்களை அழித்த பிறகே அடங்குவான் இந்த கோமாளி மாடல் அரசியல்வியாதி. நீதி கருத்து::தகுதியற்றவனை மக்கள் தலைவனாக தேர்ந்தெடுத்தால் அந்நாடும் நாடு மக்களும் கொடுக்கும் விலை என்ன என்பதற்கான சரியான/ மிகமோசமான உதாரணம் இந்த உக்ரைன் மக்கள். தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பீர் யாருக்கும் விலைபோகாதீர். இதேநிலை நாளை நமக்கும் வரலாம்.


Anand
பிப் 27, 2025 12:10

ஜெலன்ஸ்கியை உக்ரைன் மக்கள் அன்றே போட்டுத்தள்ளியிருந்தால் நாடும், நாட்டு வளங்களும், நாட்டின் சொத்துக்களும் உடைமைகளும், ஏராளமான உயிர்பலி போன்ற அணைத்து இழப்புகளையும் தடுத்திருக்கலாம்... அந்நாட்டை அழிக்க வந்த கோடாரி காம்பு ஜெலன்ஸ்கி, இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இன்னமும் அவனை அம்மக்கள் அதிபர் பதவியில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருப்பது தான்... ஒருவேளை அவனும் மாடல் ஆட்சி செய்கிறானோ?


Sankare Eswar
பிப் 27, 2025 11:14

உக்ரைனை அமெரிக்காவிடம் அடகு வைப்பதைவிட இந்த தற்குறி ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் சமாதானம் செய்துகொள்ளலாம்


karthikeyan
பிப் 27, 2025 10:23

போர் வேண்டாம் என்று ஜெலன்ஸ்கி விட்ருந்தால் மனித உயிர்களும், இயற்கை வளங்களும் இருந்திருக்கும் ..... பல நாடுகள் தூண்டுதலின் பேரில் போர் நடத்தினார் . ஆனால் இன்று ........?


வல்லவன்
பிப் 27, 2025 09:45

எரியும் வீட்டில் பிடுங்கும்வரை லாபம்


vbs manian
பிப் 27, 2025 09:42

செய்த வுதவிக்கு கனிம வளங்களை பதிலாக கேட்கிறது அமெரிக்கா. இனிமேல் உதவியும் இல்லை என்று சொல்கிறது. உக்கிரைன் பலவிதங்களில் நிர்பந்தப்படுத்த படுகிறது. ரஷ்யாவுக்கு உச்சிகுளிரும். புடின் பரவாயில்லை என்று ஜெலென்ஸ்கய் நினைக்கலாம்.


N.Purushothaman
பிப் 27, 2025 07:39

பிரிந்து போன உக்ரைனை ரஷ்யாவுடன் இணைத்து விடுவது நல்லது ...


B MAADHAVAN
பிப் 27, 2025 07:30

அனுபவமில்லாத அரை வேக்காடு உதவாத ஜோக்கர்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு நாடு எப்படி கஷ்டப் படும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை