உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 10வது ஆயுர்வேத தினம்: நியூயார்க்கில் கொண்டாட்டம்

10வது ஆயுர்வேத தினம்: நியூயார்க்கில் கொண்டாட்டம்

நியூயார்க்: நியூயார்க்கில் 10வது ஆயுர்வேத தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்ற இந்திய துணை துாதரகம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி ஆயுர்வேத தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டில்,அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பண்டைய இந்திய மருத்துவ முறைக்குள் ஊட்டச்சத்து என்ற கருப்பொருளில் 10வது ஆயுர்வேத தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது குறித்து இந்திய துணை துாதரகம் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:இது தூதர் ஜெனரல் பினயா பிரதான் தலைமையில் நடந்த குழு விவாதத்தில், இந்த ஆண்டின் கருப்பொருளான 'மக்கள் மற்றும் கிரகத்திற்கான ஆயுர்வேதம்', ஆயுர்வேதத்தை தனிநபர்களை அவர்களின் சுற்றுச்சூழலுடன் ஒத்திசைக்கும் ஒரு விரிவான அறிவியல் விளக்கமும்,ஆயுர்வேதத்தின் காலத்தால் சோதிக்கப்பட்ட கொள்கைகள், சமநிலையான ஊட்டச்சத்து, முழுமையான ஆரோக்கியம் மற்றும் மன நல்வாழ்வை எவ்வாறு வழிநடத்துகின்றன என்பது குறித்து கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெற்றது.இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !