உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனானில் மேயர் உட்பட 15 பேர் பரிதாப பலி

லெபனானில் மேயர் உட்பட 15 பேர் பரிதாப பலி

பெய்ரூட், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அந்நாட்டைச் சேர்ந்த மேயர் உட்பட 15 பேர் பலியாகினர். லெபனானின் தெற்கு பகுதியில் நபாட்டியா மாகாணத்தில் உள்ள கானா நகரத்தை குறிவைத்து, இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நேற்று அரங்கேற்றினர். இதில், அங்குள்ள அரசு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.அப்போது, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து, அந்நகர மேயர் அகமது காஹில் தலைமையில் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது.இந்த தாக்குதலில், அகமது காஹில் உட்பட 15 பேர் பலியாகினர். இது தவிர, கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ