வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆழ்ந்த இரங்கல்
ரபாடா: மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.வடஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இரண்டு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இடிந்து விழுந்த இரண்டு கட்டடங்களில் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்ந்த இரங்கல்