உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: 22 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கஹூடாவில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் பலத்த காயமுற்றனர்.பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தில் 35 பேர் கஹூடாவில் இருந்து ராவல்பிண்டிக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். பஸ் பானா பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் இருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.போலீசார், மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர்.

அதிபர் இரங்கல்

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்துவிட்டாம். இந்த சோகமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். பஸ்சில் பிரேக் பிடிக்காதது தான் விபத்து காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

PRS
ஆக 25, 2024 19:42

ஒரு மாதம் முன்பு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வைஷ்ணவி ஆலயத்திற்கு சென்றவர்களை சுட்டு கொன்று குவித்தனர். அதற்க்கு தக்க பதிலடி ஆண்டவனே கொடுத்துவிட்டான். இந்த காலத்தில் கர்மா உடனடியாக வரும்.


N Sasikumar Yadhav
ஆக 25, 2024 18:59

ஒருபக்கம் பயங்கரவாத இஸ்லாமியர்கள் குண்டுபோட்டு அப்பாவிகளை சாகடிக்கிறார்கள் இன்னொரு பக்கம் இதுபோல நடக்கிறது பாவம் பாகிஸ்தான் மக்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்


P. VENKATESH RAJA
ஆக 25, 2024 16:14

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை