உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  பாகிஸ்தான் பள்ளிக்கே செல்லாத 2.5 கோடி குழந்தைகள்

 பாகிஸ்தான் பள்ளிக்கே செல்லாத 2.5 கோடி குழந்தைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், இரண்டரை கோடி குழந்தைகள், படிப்பை பாதியில் நிறுத்திஉள்ளனர் என்பதும், அவர்களில் 2 கோடி பேர் பள்ளிக்கே சென்றதில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2023 நிலவரப்படி, மக்கள் தொகை எண்ணிக்கை, 24.15 கோடியாக உள்ளது. இந்நிலையில், அரசு அமைப்பான பாக்., கல்வி நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2.5 கோடி குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், 2 கோடி குழந்தைகள் பள்ளிக்கே சென்றதில்லை என்பது தெரிய வந்துள்ளது. மாகாண வாரியாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை வெளியிடப் பட்டுள்ளது. பஞ்சாபில் 90 லட்சம், சிந்துவில் 80 லட்சம், கைபர் பக்துங்க்வாவில் 50 லட்சம், பலுசிஸ்தானில் 30 லட்சம் குழந்தைகள் கல்வி கற்காமல் இருக்கின்றனர். தலைநகர் இஸ்லாமாபாதிலும் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட 89,000 சிறார்கள் பள்ளிக்கு செல்லவில்லை. 1,084 திருநங்கை குழந்தைகளை எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேர்க்கப் படவில்லை என, அறிக்கை கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

MARUTHU PANDIAR
நவ 17, 2025 20:15

வேறு எப்படி பயங்கரவாதிகளை பெருக்கமும் செய்வான் அவன்? காலம் காலமாய் அப்படி தானே? . செய்தி மட்டும் புதுசு. அதாவது இப்பொழுது தான் செய்தியாக வெளி வந்துள்ளது.


Santhakumar Srinivasalu
நவ 17, 2025 18:46

எந்த ஒரு நாடு குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லையோ அது உலக வரலாற்றில் காணாமல் போய் விடும்! பங்கரவாதத்தை வைத்து நாட்டு வளர்ச்சி வரவே வராது!


Rathna
நவ 17, 2025 12:32

அவனுடைய முதல் தொழிலே குண்டு வைப்பது மற்றும் தீவிரவாதத்தை உலகம் முழுவதும் பரப்புவது.


Muralidharan raghavan
நவ 17, 2025 12:19

நீங்கள் சொல்வது கேரளா தமிழகத்துக்கு பொருந்தும். மற்ற மாநிலங்களில் படிக்க அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. பதினாறுவயது முடிந்தால் திருமணம் செய்துவைத்து விடுவார்கள்


RAMESH KUMAR R V
நவ 17, 2025 12:19

நாட்டின் வளர்ச்சியோ மக்களின் மேன்பாடோ முக்கியமில்லை தீவிரவாதம் ஒன்றே குறிக்கோள்.


R.Subramanian
நவ 17, 2025 12:01

படிப்பிற்கும் தீவிரவாதத்திற்கு சம்பந்தம் இல்லை என்பதை டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் ஒரு உதாரணம்.


கண்ணன்
நவ 17, 2025 10:48

அந்த நாட்டில் எவருமே பள்ளிக்குச் சென்று படிப்பதில்லை- எல்லாம் மதராஸா கல்விதான்


sekar ng
நவ 17, 2025 08:41

இந்தியாவில் இஸ்லாமிய பெண் குழந்தைகள் கற்க இலவச உதவிகள் அதிகம். அதை இஸ்லாம் பெண்கள்100% பயன் படுத்துகிறார்கள். இந்திய முஸ்லீம் பெண்கள் தான் பாக்கிஸ்தானைவிட கல்வியில் முன்னாடி உள்ளனர்


சந்திரன்
நவ 17, 2025 08:09

அதனால்தான் அங்கே தீவிரவாதிகள் அதிகம்


SIVA
நவ 17, 2025 07:46

ஏற்கவேய் டாக்டர் வரைக்கும் படிச்சவனே புத்திசாலித்தனமா மனித வெடிகுண்டா மாறி இருக்கான் , இவிங்க மட்டும் படிச்சு வந்து என்ன செய்ய போறாங்க அதுக்கு அப்படிய திரியட்டும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை