உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானின் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல்: இஸ்ரேலை தூண்டிவிடும் டிரம்ப்

ஈரானின் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல்: இஸ்ரேலை தூண்டிவிடும் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' ஈரானின் அணு ஆயுதங்கள் மீது முதலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம்,'' என குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போரில், ஹமாஸ் படைக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் களம் இறங்கினர். இதனை தொடர்ந்து லெபனான் மீது கடுமையான விமான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அதிரடியாக வீசி தாக்கியது. இதற்காக அந்நாட்டு ராணுவத்துக்கு ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி பாராட்டு தெரிவித்து உள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. ஈரானின் அணு ஆயுத இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலை அமெரிக்க அதிபர் பைடன் அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இஸ்ரேல் முதலில் ஈரானின் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். பிறகு மற்றதை பார்த்து கொள்ளலாம். அவர்கள் செய்வார்கள் என்றால் நிச்சயம் செய்வார்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

God yes Godyes
அக் 06, 2024 09:32

ட்ரம்ப் வாழ்க


Vijay D Ratnam
அக் 05, 2024 22:39

ஒன்றுமட்டும் நல்லா தெரியுது. சும்மாவே இஸ்ரேலுக்கு முஸ்லிம்களை கண்டாலே அலர்ஜி, எரிச்சல். அதிலும் இஸ்லாமிய பயங்கரவாதின்னா போட்டு பொளக்கணும் என்று உற்சாகமாக கிளம்பிவிடுவான். அப்படிப்பட்டவன் கிட்ட போயி முதல்ல வாலாட்டியது ஹமாஸ் பயங்கரவாதிகள். இஸ்ரேல்காரனுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளை கதற கதற வச்சி செய்வது என்றால் குதூகலம் ஆகிவிடுவான். காஸாவில் வைத்து ஹமாஸை விட்டு வெளுத்ததில் இன்று 23 லட்சம் பாலஸ்தீன இஸ்லாமியர்கள் சோறு கண்ணீர் இல்லாமல் காஸாவை விட்டு ஓடி பிச்சைக்காரர்களாக அண்டை நாட்டில் அகதிகளாக கிடக்கிறார்கள். கிட்டத்தட்ட காஸாவை சுடுகாடு போல ஆகிவிட்டான் இஸ்ரேல். அடுத்து ஈரானால் உசுப்பிவிடப்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுக்க தெற்கு லெபனானை சுடுகாடு ஆக்கிக்கொண்டு இருக்கிறான். இடையில் ஏமனில் இருந்து ஹவுதி இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்க முற்பட இஸ்ரேல் எமனை போட்ட பொட்டில் சப்தநாடியும் ஒடுங்கி இருக்குற இடம் தெரியாம கமுக்கமா அடங்கிட்டானுங்க எமன் மற்றும் ஹவுதிகள். இந்த பிசி செட்யூலில் வெளியில போற ஓணானை எடுத்து பாவாடைக்குள் விட்டுக்கொண்டது போல ஈரான் வம்படியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. வாடி வா, இதுக்குத்தான் காத்துகிட்டு இருந்தேன் என்று இஸ்ரேல் ஆட்டத்தை தொடங்க போறான். இஸ்ரேலின் உளவு அமைப்பு மொஸாட் ஈரானில் எந்த இடத்தை எல்லாம் தாக்கி தகர்க்க வேண்டும் என்று துல்லியமாக பிளான் போட்டு வைத்து இருக்கிறான். இஸ்ரேல் உடனடியாக தாக்கி இருந்தால் சாதாரணமாக இருந்திருக்கும். அவன் சற்று அமைதி காப்பது ஈரானுக்கு பேராபத்து ஆக போகிறது.


RK
அக் 05, 2024 18:26

குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆக்கிவிடுவான் ஈரான். டிரம்ப் சொல்வதுதான் சரி. முதலில் அணு உலைகளை தூள்தூள் ஆக்க வேண்டும். ஆயுத கிடங்குகளை அழிக்க வேண்டும். தீவிரவாதிகளை சமாதி கட்ட வேண்டும்.


Lion Drsekar
அக் 05, 2024 18:21

அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் ஒரு துகளில் தூசாக வாழும் இந்த பிறவிகள் தானும் தன கொள்கைகளை உலகம் பின்பற்றவேண்டும் என்று பல லட்சம் கோடி என்று செலவு செய்து இவர்களை மட்டும் அளித்துக்கொள்ளவில்லை, பூமியின் ஆயுட்காலத்தையும் அழித்துக்கொண்டு செல்கிறார்கள், எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார், வழி போக துணையாய் அன்பே வாராயோ. ஊரை விட்டு ஓ ஓர் குடிசை அங்கே யார் சென்று போட்டு வைத்தார், சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார் காணும் கனவுகளில் இன்பம் இன்பம் உண்மை அதற்கு வெகு தூரம், மண் கேட்டா குண்டு மழை பொழியும் இவர்களை யார் கேட்க முடியும், ஹிரண்யாய நமஹ


Easwar Kamal
அக் 05, 2024 18:11

இந்த trumpan தானும் அழிஞ்சு அமெரிக்காவாய்யும் அளிக்காம விடாது போல இந்த கருப்பு. ஈரான் ஒன்றும் சாதாரண நாடு கிடையாது அதை புரிந்து சேயால் பட வேண்டும். இராணனின் 10% நில பரப்பு தன இந்த இஸ்ரேல். ஒழுங்கா இப்போது உள்ள கசாவை சேரி படுத்தி இஸ்ரேலோடு இணைத்து கொள்ளுங்கள். முடிந்தால் பலஸ்தீனத்தியும் அதை விட்டு புட்டு அனாதை நாடுகள் அனைத்தயும் சண்டை இடுவேன் ன்றால் இஸ்ரேல் காணாமலே போய் விடும். இந்த ற்றும்பன் தீவிரதியுடன் டீல போட்டு இன்று ஆப்கான் காணாமல் போய் விட்டது .


Venkatesan Srinivasan
அக் 05, 2024 18:00

ஏற்கனவே வெளியான செய்திகளின் படி அமெரிக்க அதிபர் ஜோ பையன் இஸ்ரேல், ஈரானின் எண்ணெய் வயல்களின் மீது தாக்குதல் நடத்துவது சரியானதாக இருக்காது என்றும், தான் இஸ்ரேலின் நிலைபாட்டில் இத்தகைய முடிவைத் தான் எடுப்பேன் என்று வெளியிட்டு உள்ளார். அதையே ட்ரம்ப் அணு ஆயுதங்கள் மீதான தாக்குதல் என கூறியுள்ளார். மேலும் ஈரான் போன்ற நாடுகளிடம் அணு ஆயுதம் என்பது என்றைக்கும் உலக அமைதிக்கு ஒரு சவால். நடப்பது நல்லதாக இருக்கட்டும்.


M.Sam
அக் 05, 2024 16:57

This is what expected from USA teason being HE IS AN ISRAEL NO WONDER HE SUPPORT THAT COUNTRY Anyway the world is going face a bloody war That is for sure India is going to support ISTAEL only Reason The people who are ruling india are the DESCENDED of Israel Only So no wonder they support them Bit one thing for sure The out come of this war going to decide the fate of this world


Duruvesan
அக் 05, 2024 18:44

திராவிட மாடல் மூலம் இங்கிலிஷ் எழுத கத்துக்கிட்டான் போல, சூப்பர்


SUBBU,MADURAI
அக் 05, 2024 16:25

It's an opportunity of a lifetime for Iranians to throw away chains of Ayafuckingtollah's slavery. Time and tide waits for none.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை