உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனமழை, வெள்ளம் பாதிப்பால் சீனாவில் 44 பேர் பலி

கனமழை, வெள்ளம் பாதிப்பால் சீனாவில் 44 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் 44 பேர் பலியானதாகவும் 9 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீனாவில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, 44 பேர் உயிரிழ்ந்தனர், 9 பேர் மாயமாகினர். சாலைகள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:பெய்ஜிங்கின் வடக்கு மலை மாவட்டங்களான மியுன் மற்றும் யாங்கிங்கில் தான் உயிரிழப்புகள் அதிகம். கடந்த வாரம் கனமழை தொடங்கியது. அதனை தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் பேரழிவுகளுக்கு மத்தியில் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருந்தார். அதன்படி முன்னெச்செரிக்கையாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.வெள்ளத்தால் 31 சாலைப் பகுதிகள் சேதமடைந்தது.136 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூலை 31, 2025 17:32

சீனான்னா பொருளாதார முன்னேற்றம் ........பலவகை முன்னேற்றம் என்று தினம் தினம் பேப்பரில் வருகின்றது. அப்போ மழை பெய்தால் அதுவும் சென்னை போல ஆகிவிடுமா என்ன????


கனோஜ் ஆங்ரே
ஜூலை 31, 2025 20:02

அரசனானாலும், ஆண்டியானாலும், ஐடி மேதாவினாலும், கல்வி மேதையானாலும், தகவல் தொழில்நுட்ப புலியானாலும், வானிலை முன்னெச்சரிக்கை ஆராய்ச்சியாளானாலும் இயற்கை அடிக்குற அடியை வாங்கித்தான் ஆகணும்... தற்காத்துக் கொள்ள முடியாது... அது “ஓங்கி அடிச்சா, ஒன்றரை டன் வெயிட்ல அடிக்கும்... அதுவும் எதிர்பார்க்காத நேரத்தில், எதிர்பார்க்காம அடிச்சு... கதற வச்சிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை