உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா இந்தியர்கள் பயணித்த பஸ் விபத்தில் சிக்கி 5 பேர் பலி

அமெரிக்கா இந்தியர்கள் பயணித்த பஸ் விபத்தில் சிக்கி 5 பேர் பலி

நியூயார்க்:நியூயார்க் நெடுஞ்சாலையில், இந்தியர் உள்ளிட்டோர் பயணித்த சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில், ஐந்து பேர் பலியாகினர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி. இங்கு சுற்றுலா பயணியரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று நியூயார்க் நகருக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தது. இதில், இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த 54 சுற்றுலா பயணியர் இருந்தனர். பபலோவிலிருந்து 45 கி.மீ., தொலைவில் நியூயார்க் நெடுஞ்சாலையில், ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஐந்து பயணியர் உயிரிழந்தனர். ஆனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை