உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடந்தாண்டு அரசியலுக்கு வந்தவர் புதிய பிரதமராக தேர்வானார்

கடந்தாண்டு அரசியலுக்கு வந்தவர் புதிய பிரதமராக தேர்வானார்

வில்னியஸ்: லிதுவேனியாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இங்கா ருகினீனே, 44, தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் பிரதமராக இருந்த கிண்டவுடாஸ் பலுகாஸ், தொழில்களில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சமீபத்தில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான இங்கா ருகினீனே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்புதான், சமூக ஜ னநாயக கட்சியில் அவர் சேர்ந்தார். தேர்தலில் போட்டியிட்டு பார்லிமென்ட் உறுப்பினரான இவர், கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்நாட்டின் சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் தற்போது அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R. THIAGARAJAN
ஆக 27, 2025 21:00

இதுவும் கடந்து போவும் அவரகளுக்கும் ஓப்புக்கு ஓரு பிரதமர் வேறு யாரும் கிடைக்கவில்லை நம்ம டெல்லி சி ம் போல்


Kulandai kannan
ஆக 27, 2025 10:22

இவர் மட்டும் தமிழக அரசியலில் இருந்தால், இந்நேரம் ஊப்பீஸ்..


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 27, 2025 09:05

வருங்கால பிரதமர் விஜய் வாழ்க


Rowdram Bharathi
ஆக 27, 2025 10:43

எந்த நாட்டிற்கு?


புதிய வீடியோ