| ADDED : ஜூன் 10, 2024 10:50 AM
நியூயார்க்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின்போது 'இம்ரான் கானை விடுதலை செய்யுங்கள்' என்ற வாசகத்துடன் மைதானத்தின் மேலே விமானம் பறந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று (ஜூன் 9) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரம எதிரிகளாக கருதப்படும் இந்த இரு அணிகளின் போட்டியை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bkxxum1s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போட்டியின் துவக்கத்தில் இரு நாட்டு தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டபோது திடீரென மைதானத்தின் மேலே பறந்த சிறிய ரக விமானம் 'இம்ரான் கானை விடுதலை செய்யுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் பறந்தது. இதனை போட்டியை காண வந்த ரசிகர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.போட்டியின் போது இந்த விமானத்தை யார் இயக்கினார்கள், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். சமீபத்தில் நடந்த அந்நாட்டு பார்லி., தேர்தலில் இம்ரானின் ஆதரவு பெற்ற சுயேட்சைகளே அதிகம் வென்றிருந்தனர்.