உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சும்மா இருந்த எனக்கு சம்பளம் ரூ.3 கோடி: அமேசான் ஊழியரின் பதிவு வைரல்

சும்மா இருந்த எனக்கு சம்பளம் ரூ.3 கோடி: அமேசான் ஊழியரின் பதிவு வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியில் இருப்பதாகவும், எந்தவித வேலையும் செய்யாமல் சும்மாவே இருப்பதாகவும், ஆனால் ஆண்டுக்கு ரூ.3.10 கோடி சம்பளம் பெறுவதாகவும் கூறியுள்ள பதிவு வைரலாகியுள்ளது.எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கான ஊதியம் கிடைக்கவில்லை என பலரும் புலம்பி வருகின்றனர். சம்பள உயர்வு கிடைக்காதா என ஏங்கியுள்ளனர். ஆனால், இங்கு ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்ததற்காக ஆண்டுக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். வேறு எங்கும் இல்லை அமேசான் நிறுவனத்தில்தான். ஊழியர்கள் பலரும் தங்கள் பணி சம்பந்தமான கருத்துகளை 'பிளைண்ட்' தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மூத்த ஊழியர் ஒருவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பதிவு: கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பை மேற்கொண்டபோது என்னுடைய வேலை பறிபோனது. இதையடுத்து அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தேன். கடந்த 1.5 ஆண்டுகளாக, முதுநிலை தொழில்நுட்ப திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ஊதியம் ஆண்டுக்கு ரூ.3.10 கோடி. இந்த ஊதியத்துக்கான எந்த வேலையும் நான் அங்கு செய்வதில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைவான வேலைகளையே நான் செய்துள்ளேன். வெறும் 3 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை செய்ய 3 மாதங்கள் எடுத்துள்ளேன். என்னுடைய வேலை நேரத்தில் பெரும் பகுதி அலுவலக மீட்டிங்களுக்கே கழிந்து விடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக ஊதியம் பெறுகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு வைரலான நிலையில், சிலர் ஆதரித்தும் சிலர் விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Manon
ஆக 28, 2024 22:09

Salary/wage is not for doing work but for available at the disposal of the employer. It is for the employer to decide their employee should work or be idly available at their spot.


Mr Krish Tamilnadu
ஆக 26, 2024 22:46

இந்தியாவில் அமேசான் ஆண்டுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு வரி செலுத்துகிறது என்பதையும் வெளியிடவும்.


சமூக நல விரும்பி
ஆக 26, 2024 18:20

இது என்ன பிரமாதம். நம்ம திராவிட மாடல் அரசில் ஒரு பெயரை வைத்து கொண்டு பல இடங்களில் வேலை செய்வது போல நாடகமாடி மக்கள் வரி பணத்தை சுருட்டும் கொள்ளையர்கள். பற்றி இவருக்கு தெரியாது போலும். வெளி வராத கொள்ளை பணம் இன்னும் எவ்வளவு என்று யார் கூறுவார்கள்.


Saai Sundharamurthy AVK
ஆக 26, 2024 17:29

நம் தமிழகத்தில் அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள், மேயர், சேர்மன், பஞ்சாயத்து தலைவர், 5000 ஓட்டு, 2000 ஓட்டுக்கரர்கள் மாதிரி தெரிகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னால் காய்ந்து கொண்டிருந்த நகராட்சி தலைவர்களின் பட்டியலை எடுங்கள். ஒவ்வொருவரின் வீடுகளைப் போய்ப் பார்த்து ஒரு கருத்து கணிப்பு வெளியிடுங்கள். இந்த ஆள் எவ்வளவோ மேல் என்று தெரிந்து கொள்ளலாம்.


நிக்கோல்தாம்சன்
ஆக 26, 2024 17:18

தமிழகத்தில் ஒருத்தன் மாதம் 30000 கோடி சம்பாதித்து கொண்டுள்ளான் , நீங்க என்ன பிசாத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை