உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அந்தமான் பழங்குடியினர் பகுதியில் அத்துமீறி புகுந்த அமெரிக்கர் கைது

அந்தமான் பழங்குடியினர் பகுதியில் அத்துமீறி புகுந்த அமெரிக்கர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபார் தீவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கரை சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர்.அந்தமான் நிக்கோபார் தீவின் தெற்கு அந்தமான் பகுதியில் உள்ள தர்முக்லி தீவு அருகே ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்த தீவு பகுதியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட பிறர் அங்கு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் மைகைலோ விக்டோர்விச் போலியாகாவ், 24, என்ற அமெரிக்கர் கடந்த மாதம் 27ல் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு வந்தார். அங்குள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அவர், மார்ச் 29 அதிகாலையில் அங்குள்ள குரமந்தே தீவுக்கு ஒற்றை இருக்கைகொண்ட ரப்பர் படகில் சென்றார். அவரை பார்த்த பழங்குடியினர் அதிர்ச்சியடைந்து சி.ஐ.டி., போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து போலியோகோவை கைது செய்தனர்.இது குறித்து டி.ஜி.பி.,தாலிவால் கூறியதாவது: அமெரிக்கர் போலியோகாவ் பழங்குடியினர் பகுதிக்கு அத்துமீறி சென்றது ஏன் என விசாரிக்கப்படுகிறது, அவர் போர்ட்பிளேயரில் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்த தீவுக்கு அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இருமுறை பயணம் செய்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

G.Ranganathan
ஏப் 04, 2025 07:34

மத வெறி கொண்டு அப்பாவிகளை மதம் மாற்றச் சென்றிருக்கிறான்.இவனை கடுமையாக தண்டிக்க வேண்டும்


Tetra
ஏப் 03, 2025 17:55

அவர் சென்டினல் கள் வசிக்கும்‌ பகுதிக்கு‌ போயிருந்தால் சங்கு ஊதியிருப்பார்கள். நம் போலீஸூம் போயிருக்க மாடார்கள். வேறு பழங்குடி பகுதிக்கு மதமாற்றம் செய்ய‌ போயிருப்பார். தப்பித்தார்.


Ganapathy
ஏப் 03, 2025 11:30

வெளிநாட்டு மிஷனரிகள் சுற்றுலா பயணிபோல அங்கெங்கும் கினாதபடி இந்தியா முழுக்க சுத்துறானுங்க. மதத் திமிருதான் காரணம்.


M Ramachandran
ஏப் 03, 2025 10:51

பழங்குடியானர் வசிக்கும் பகுதியில் போன் வசதி உண்டா? அப்போ எப்படி பழங்குடியினர் அவர்கள் ஆவார்கள்?


கண்ணன்
ஏப் 03, 2025 10:33

வேறு எதற்கு வரப்போகிறார் 1. மதமாற்றம் 2. உளவு- சீனாவிற்காக


Oru Indiyan
ஏப் 03, 2025 09:46

அமெரிக்காவிலிருந்து சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை கால் விலங்கு போட்டு நாடு கடத்திய டிரம்ப் போல இந்த அமெரிக்கனயும் கை கால் விலங்கு போட்டு திருப்பி அனுப்புங்கள்


Sundar Pas
ஏப் 03, 2025 09:30

குண்டர் சட்டத்தில் அடைக்கவும்.


shanmugam subramanian
ஏப் 03, 2025 09:00

வணக்கம், அத்துமீறுபவர்கள் தங்களை தண்டனைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களின் எண்ணம் என்ன என்று தீவிரமாக விசாரித்ல் அவசியம் நன்றி, வணக்கம்.


sankaranarayanan
ஏப் 03, 2025 08:27

இதே போன்று அமெரிக்காவில் செய்தால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு பொறுத்துக்கொள்வாரா அமெரிக்கர்களுக்கென்றால் உலகம் முழுவதும் அவர்களுக்கு ஒரு தனி சட்டம் மற்றவர்களுக்கு அதே சட்டம் அமெரிக்கவில்லை செல்லாது என்ன ஜனநாயகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை