பீஜிங்: ஏற்கனவே கழுத்தை நெரிக்கும் வகையில் கடனில் சிக்கி தவிக்கும் மாலத்தீவுக்கு வரைமுறையின்றி கடன் வழங்க சீனா புதிய நிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து சீனா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.ஆபத்தில் உதவுவது போல், உதவி செய்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தான் சீனாவின் பழக்கம் என்றே சொல்லலாம். இது தான் அவர்களது ஸ்டைல் எனவும் அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே, பொருளாதார நெருக்கடி உள்ள நாடுகளுக்கு கடனை அள்ளி கொடுத்து, பின்னர் திருப்பி தர முடியாத சூழல் உருவாகும் போது தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தனக்கு தேவையான வேலைகளை செய்ய பயன்படுத்தி வருகிறது. இலங்கை சீனாவின் வலையில் சிக்கியுள்ளது. தற்போது மாலத்தீவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.ஒப்பந்தம்
இந்நிலையில், ஏற்கனவே கழுத்தை நெரிக்கும் வகையில் கடனில் சிக்கி தவிக்கும் மாலத்தீவுக்கு வரைமுறையின்றி கடன் வழங்க சீனா புதிய நிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து எந்த தகவலும் சொல்லாமல், சீனா மவுனம் காத்து வருகிறது. வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று சீனாவின் மத்திய வங்கி கூறியுள்ளது. உதவி
சீனாவுக்கு கொடுக்க வேண்டிய பழைய பாக்கியை இன்னும் மாலத்தீவு திரும்பி கொடுக்கவில்லை. 'மாலத்தீவின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா எப்போதும் போல ஆதரவையும், உதவியையும் வழங்கும்' என அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.கடன் எவ்வளவு?
மாலத்தீவின் மிகப்பெரிய கடன் வழங்குபவர் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் $1.3 பில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது. சீனா இன்னும் கூடுதலான ஆதரவு கொடுக்க மாலத்தீவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாலத்தீவின் புதிய அரசின் ஆட்சியில் கடன் அதிகரித்துள்ள போதிலும், சீனா ஆதரவாக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாலத்தீவு பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தான் சீனா, மாலத்தீவு இடையே உறவுகள் அதிகரித்தது.