உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!

அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அமெரிக்காவின், மினசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமடைந்து வந்த, மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் பலத்த காயம் அடைந்தார். இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாக்குதல் நடத்தியவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

அதிபர் கண்டனம்

மினசோட்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'இது போன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது', என்றார்.'மினசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்க வேண்டும். இந்த தாக்குதல் நடத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கவர்னர் டிம். வால்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramaraj P
ஜூன் 15, 2025 06:17

இஸ்ரேல் இந்தியா போலத்தான் யாருடைய ஆதரவுடனும் தீவிரவாதிகளை அழிக்க வில்லை. அமெரிக்க ஆதரவு இல்லாமல் தான் இந்தியா "ஆப்பரேஷன் சிந்தூர்" ஆரம்பித்து இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இந்தியாவைப் போலவே "ஆப்பரேஷன் ரைசிங் லைன்" ஆரம்பித்து நடத்தி வருகிறது.


Padmasridharan
ஜூன் 15, 2025 03:37

அங்கேயும் ஆரம்பிச்ட்டங்களா காவல் உடையில் ஏமாத்த. . நிஜக்காவலர்களும் மக்களை ஏமாத்தி பண மோசடி பண்றதால சாதாரண மக்களும் அதையே எளிதில் பன்றாங்க


உண்மை கசக்கும்
ஜூன் 15, 2025 00:45

டிரம்ப், நீ முதலில் இஸ்ரேல் பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்து. இல்லாவிட்டால் உன் வீட்டில் கொலைகள் அதிகரிக்கும்


தியாகு
ஜூன் 14, 2025 23:18

உலகின் கடைசி மூர்க்கனும், உலகின் கடைசி மர்ப நபரும் இருக்கும் வரையில் இந்த உலகில் அமைதி இருக்காது. ஏன்னா அவனுங்க டிசைன் அப்படி.


Nada Rajan
ஜூன் 14, 2025 22:01

அமெரிக்கா அரசியல் சாக்கடை... கொலை நடக்குது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை