உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் தொடரும் தாக்குதல்: ஹிந்துக்கள் போராட்டம்

வங்கதேசத்தில் தொடரும் தாக்குதல்: ஹிந்துக்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் தொடர்ந்து நடக்கும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மை இன மக்கள் டாக்காவில் பேரணியாக சென்றனர்.வங்கதேசத்தில் மாணவ அமைப்பினர் போராட்டம் எதிரொலியாக ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததன் காரணமாக அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இது அவர்கள் இடையே பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், வெளிநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து அந்நாட்டு இடைக்கால அரசு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. ஆனால், தாக்குதல் சம்பவங்கள் நிற்கவில்லை. அதேநேரத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பூஜை நடக்கும் இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.இதனை கண்டித்து ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்தினர். அப்போது காவிக்கொடி ஏந்தி சென்றதாக கூறி அவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.இந்நிலையில், தாக்குதல் சம்பவங்களை கண்டித்து டாக்காவில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.எங்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை இயற்றவும், இடைக்கால அரசில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சாரு சந்திர தாஸ் என்பவர் கூறுகையில், சிறுபான்மையினர் சந்திக்கும் வேதனைகளை இந்நாட்டின் இடைக்கால அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. எங்கள் மீதும், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் மீதும் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Dharmavaan
நவ 03, 2024 20:55

முஸ்லிம்களுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் முஸ்லீம் நாட்டிலும் இல்லை.கேடுகெட்ட சட்டங்கள்


Dharmavaan
நவ 03, 2024 20:53

மதத்துக்கு ஏற்றபடி சட்டங்கள் ஹிந்துக்களை தவிர கேவலமான நாடு


sankaran
நவ 03, 2024 17:53

எங்கேயோ இருக்கிற சிரியாவுக்கு ஒரே கூப்பாடு இங்கே ... ஒருவன் கூட வாய தொறக்கல பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கு ...


Kanns
நவ 03, 2024 15:43

Divide Bangladesh erstwhile IndianState by Liberating its Entire Coast for Settling its GenocidedNative Hindus


GMM
நவ 03, 2024 13:35

வங்கதேசம் இந்திய முன்னாள் நில பகுதி. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 மாநிலமாக்கி, இந்திய அரசியல் சாசனம் கீழ் உடனடியாக கொண்டுவர வேண்டும். ஆக்கிரமிப்பு பூமியில் கட்டுப்பாடு இருக்காது. அண்டை நாடுகளுக்கு எப்போதும் தொல்லை.


Ramesh Sargam
நவ 03, 2024 13:08

இந்த விஷயத்தில் இந்திய அரசு உடனே காலம் தாழ்த்தாமல் தலையிட்டு அங்குள்ள ஹிந்துக்களை பாதுகாக்கவேண்டும். மயிலே மயிலே என்றால் அது இறகு போடாது.


V RAMASWAMY
நவ 03, 2024 12:30

நமது தேசத்தில் மட்டும் தான் செகுலரிஸ்ம் என்கிற பெயரில் ஒரு சமூகத்திற்கு, அவர்களை peruvaariyaana மற்ற சமூகத்தினரையே அசிங்கமாகவும் அநாகரீகமாகவும் பேசி நடந்துகொள்ளும் அளவுக்கும் அதீத உரிமைகளும், அங்கீகாரங்களும் சலுகைகளும் கொடுக்கப் படுகின்றன. அண்டை நாடான பாகிஸ்தானில் இந்துக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது, அடக்கி கொண்டாடவேண்டுமென்கிற அடக்கு முறை. நம் தேசத்தில் அவர்கள் பண்டிகைகளுக்கு தேசீய விடுமுறைகள், ஊரவலங்களுக்கு வசதிகள், பாதுகாப்பு இவைகள் தாராளம். ஐ நா சபை என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.


Murugesan
நவ 03, 2024 11:29

பாஜக வாய்ச்சவடால் சுயநலவாதிகள்


Mohamed Younus
நவ 03, 2024 09:55

எந்த நாடாக இருந்தாலும் சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்க வேண்டும். அடுத்தவரின் உரிமைக்கு மதிப்பு கொடுப்பவன் சிறந்த இஸ்லாமியர் ஆவார்.


ஆரூர் ரங்
நவ 03, 2024 10:45

தான் வணங்கும் ஏக இறைவனை ஏற்க மறுப்பவர்களை துரத்திச் சென்றாவது கொலை செய்ய வேண்டும் என்று கூறும் மர்மப் புத்தகம் எது? வங்காளதேசத்தில் நடப்பது அதுதான். நாயகன் கூறிய கடமையை நிறைவேற்றுவதற்காக நினைகிறார்கள். அடிப்படை பிரச்சனை ஒரு புத்தகம்தான்.


சாண்டில்யன்
நவ 03, 2024 11:46

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி, வெந்து தான் தீரும் ஓர் நாள். - கிருஷ்ணர்


Duruvesan
நவ 03, 2024 12:14

நீங்க உண்மையான இஸ்லாமியர் போல இருக்கு.100 ல 10 பேர் உங்க கூட்டத்துல நல்லவர்கள், அது இந்தியாவில். அபுதாபி ல 100/100 பேரும் நல்லவர்கள். புனித நூல் சரியான புரிதல் அங்கு, இங்கு அது இல்லை. யூனுஸ் நண்பரே உங்களை போல் சிலர் எங்கும் உள்ளனர். நான் மூர்கன் என்று சொல்வது மனித தர்ம எதிரிகளை மட்டுமே, அது ரெண்டு பக்கமும் உள்ளது


mei
நவ 03, 2024 09:37

இதற்கெல்லாம் இந்தியாவின் உதவாத சட்டங்களும் அரசாங்கத்தின் மெத்தனமுமே காரணம். உலகில் எங்கு தமது மதத்தை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டாலும் தமிழ் நாட்டின் மூலையில் வசிக்கும் முஸ்லீம் கொதித்து எழுவான். ஆனால் இந்துக்கள் அசமந்தங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை