உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிதி முறைகேடு புகாரில் சிக்கிய நமல் ராஜபக்சேவுக்கு ஜாமின்

நிதி முறைகேடு புகாரில் சிக்கிய நமல் ராஜபக்சேவுக்கு ஜாமின்

கொழும்பு : இலங்கை அரசின் நிதியை தவறாக பயன்படுத்திய வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி செய்கிறது. இந்நிலையில், இலங்கை பொதுஜன பேரமுனா கட்சித் தலைவரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே மீது கடந்த 2015ல் சொத்து குவிப்பு புகார் எழுந்தது.இவர், ரக்பி விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசின் நிதியை பயன்படுத்துவதாக கூறி, 2.05 கோடி ரூபாய் மதிப்பில் கிரிஷ் ஹோட்டல் என்ற திட்டத்தை மேற்கொண்டார். இலங்கை தலைநகர் கொழும்புவின் மையப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், அத்திட்டம் பாதியில் நின்றது. இதற்கிடையே, கடந்த 2016ல் இலங்கை அரசின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2016ல் நமல் ராஜபக்சே கைதுசெய்யப்பட்டார். எனினும், அதன்பின் ஜாமினில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக தற்போதைய இலங்கை அரசு இவ்வழக்கின் விசாரணையை மீண்டும் துரிதப்படுத்தியது. இந்த வழக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நமல் ராஜபக்சே மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன; எனினும், அவருக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டது. இதேபோல் மற்றொரு வழக்கில், நமல் ராஜபக்சேவின் சகோதரர் யோஷிதாவும் சமீபத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ