உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்பிள் மொபைல் போன்களுக்கு தடை: எலான் மஸ்க் மிரட்டல்

ஆப்பிள் மொபைல் போன்களுக்கு தடை: எலான் மஸ்க் மிரட்டல்

வாஷிங்டன்: தனது நிறுவனங்களில் ‛ ஆப்பிள்' மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப் போவதாக டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதள நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.ஆப்பிள் நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன்கள் மற்றும் செயலிகளில் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.இந்நிலையில், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் நிர்வாக அதிகாரியும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஓபன் ஏஐ -ன் தொழில்நுட்பத்தை ஆப்பிள், தனது சாதனங்களில் இணைத்தால், எனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல். நிறுவனங்களுக்கு வருபவர்கள், தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலில் இருக்கும் கூண்டில் வைத்துவிட்டு வர வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூன் 11, 2024 14:54

ஓபன்ஏஐ கைவிட்டுப்போன வருத்தத்தில் இப்படி வன்மத்துடம் ஆப்பிள் மீது பாய்கிறார். ஏஐ தொழில் நுணுக்கத்தை ஆப்பிள் ஏற்கனவே தனது மென்பொருள்களில் புகுத்தி பல ஆண்டுகள் ஆகிறது.


Kannan Soundarapandian
ஜூன் 11, 2024 14:43

பொதுவாக ஏஐ என்னும் தொழில்நுட்பத்தை இன்னும் சரியாக நிறுவனங்கள் புரிந்து கொள்ளவில்லை. எனவே சைபர் தெஃப்ட் உண்டாகும் என்ற அச்சத்தால் எழுந்த பிரச்சினை என்று நினைக்கிறேன்.


Ramesh Sargam
ஜூன் 11, 2024 12:40

பொறாமை...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி