உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்கான் அமைப்புக்கு தடை; வங்கதேசம் கோர்ட்டில் மனு

இஸ்கான் அமைப்புக்கு தடை; வங்கதேசம் கோர்ட்டில் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா, வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவரை விடுவிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அங்கு, 'இஸ்கான்' அமைப்பை தடை செய்யக்கோரி, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி. கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிருஷ்ண தாசை, போலீசார் அழைத்து வந்த போது, அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை போலீசார் கலைத்தனர். இந்த போராட்டத்தின் போது நடந்த தாக்குதலில் சைபூல் இஸ்லாம் என்ற வழக்கறிஞர் கொல்லப்பட்டார். இந்நிலையில், வங்கதேசத்தில் செயல்படும் இஸ்கான் அமைப்பை தடை செய்யக் கோரி, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'சமீபத்திய பிரச்னைகளால் நாட்டை சிலர் சீர்குலைக்க முயல்கின்றனர். ஹிந்து துறவி கைதால் தேவையற்ற பிரச்னைகள், கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. 'இதற்கு காரணமாக கூறப்படும் இஸ்கான் அமைப்பை தடை செய்ய வேண்டும். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சிட்டங்காங், ரங்பூரில் அவசர கால சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்' என கோரப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் அசாதுஸ்ஸமான், 'சமீபத்தில் நடந்த வன்முறை, கலவரம் குறித்து அரசியல் கட்சியினருடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது. தேச ஒற்றுமையை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரம் கவலை அளிக்கிறது. துறவியின் கைதைத் தொடர்ந்து நடந்த போராட்டம் மற்றும் வன்முறை குறித்தும், இஸ்கான் அமைப்பு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அரசு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழ்வேள்
நவ 28, 2024 20:16

முக்காலன் முகமது யூனுஸின் நோபல் பரிசை ரத்து செய்து பறிக்கும் படி பாரதம் அழுத்தம் தர வேண்டும்....


&2992&3006&2990&2985&3021
நவ 28, 2024 16:55

ஹரே கிருஷ்ணா


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 28, 2024 12:38

பாரதத்தில் குறைந்த பட்சம் இஸ்லாமிய வகுப்புவாத அமைப்புக்களைத் தடை செய்ய வேண்டும்... தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்.... அதைச்செய்ய வக்கில்லாத அரசு இந்த பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ......


canchi ravi
நவ 28, 2024 10:48

பார்க்கலாம் எத்தனை நாட்கள் அமெரிக்கா தூண்டிவிட்ட ஆதரவுடன் ஹிந்துக்களை வன்முறையால் தாக்குவீர்கள். எல்லை தாண்டினால், பழிக்குப் பழி இந்தியா வாங்கும்.


sankar
நவ 28, 2024 09:42

சகிப்புத்தன்மை கொடிகட்டி பறக்கிறது - எங்கே அந்த செகுலரிஸ்ட்களை காணோம்


A. Kumar
நவ 28, 2024 09:28

பங்களாதேஸ்.பாகிஸ்தானை நாம் ஒரு போடு போட்டால் அடங்கிப் போவர்.


karthik
நவ 28, 2024 08:43

இந்து மக்கள் பெரும்பான்மையாகவும் ஒற்றுமையாகவும் இங்கும் இந்து அரசாங்கம் வலிமையாகவும் இருக்கும் வரைக்கும் தான் இந்துக்களுக்கு பாதுகாப்பு என்பதை மீண்டும் தற்போதைய பங்களாதேஷாம் உணர்த்தியுள்ளது.. நிரூபித்துள்ளது.


Nandakumar Naidu.
நவ 28, 2024 07:57

பங்கள்தேஷ் அரசாங்கமும், மக்களும் ஹிந்துக்களுக்கு செய்யும் பாவத்திற்கு மிக மோசமான தண்டனையை அனுபவிக்க போகிறார்கள்.


Amruta Putran
நவ 28, 2024 07:16

No Secularists doesn’t open their mouth, Are Hindus not humans? Save Hindus


நிக்கோல்தாம்சன்
நவ 28, 2024 06:13

அப்போ பொதுமக்களின் சொத்துக்களை திருடி பிழைக்கும் வக்ப் அமைப்பு இங்கே தடை செய்யலாம் அல்லவா


sankar
நவ 28, 2024 09:44

அதுக்கும் இதுக்கு சம்பந்தம் இல்லை - ஆனால் வக்ப் என்பது நமது அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு தன்னாட்சி அமைப்பு - செகுலரிஸ்ம் பேசிக்கொண்டு இஸ்லாமுக்கு தனி சட்டமா - சிந்தியுங்கள்


நிக்கோல்தாம்சன்
நவ 30, 2024 21:02

நீங்க கேட்பது சரிதான் சங்கர் அவர்களே


புதிய வீடியோ