உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவியை நாடுகிறது வங்கதேச அரசு

ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவியை நாடுகிறது வங்கதேச அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கு, 'இன்டர்போல்' உதவியை நாட வங்கதேச இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஜூலையில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர். வன்முறையை கட்டுப்படுத்த முடியாததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சமடைந்துஉள்ளார். இதற்கிடையே, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. கடந்த 15 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தன் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் செய்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக ஹசீனாவை கைது செய்து நவ., 18ம் தேதிக்குள் ஆஜர்படுத்த வங்கதேசத்தில் செயல்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை நாட வங்கதேச இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து அந்நாட்டு சட்ட விவகாரங்கள் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் நேற்று கூறுகையில், “தப்பியோடிவர்கள் உலகில் எங்கு மறைந்திருந்தாலும், அவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

SUBBU,MADURAI
நவ 11, 2024 12:52

Khalistani terrorists attack Hindu temples in Trudeau Canada, Islamist terrorists attack Hindus in Yunus Bangladesh But in the eyes of world media, Trudeau and Yunus are liberal heroes


sankar
நவ 11, 2024 09:11

இன்னும் ஒரே மாதத்தில் தற்போதைய அந்த பொம்மை அதிபர் ஓடப்போகிறார்


Sivagiri
நவ 11, 2024 08:20

இந்தியா முழுவதும் சோதனை நடத்தி , ஊடுருவிய எல்லா பங்களாதேசிகள் , பர்மிஸ்கள் , அப்புறப்படுத்த வேண்டிய டைம் வந்திருச்சு , நாடு முழுவதும் , சிறிய பெரிய தொழிற்சாலைகள் , வியாபார கடைகள் மால்கள் , கட்டுமான நிறுவனங்கள் , முழுவதும் , தங்களிடம் வேலை செய்யும் வெளியூர் வெளி நாட்டவர் முழு விவரங்களை அந்தந்த காவல்துறை மூலம் அலசி ஆராய்ந்து , சட்ட விரோத ஆட்களை , வெளியேற்ற வேண்டிய கட்டாயம் வந்து விட்டது . ..


N Sasikumar Yadhav
நவ 11, 2024 07:15

நோபூல் பரிசு பெற்றவன்தான் கேவலமான ஆட்சி செய்து இந்துக்களுக்கு கொடுமைகளை செய்கிறான் . நோபுலுக்கு கொஞ்சங்கூட தகுதியில்லாதவன்தான் இந்த வங்கதேச பிரதமரு


visu
நவ 11, 2024 06:54

மீண்டும் ஒரு கலவரம் வெடிக்க வாய்ப்புண்டு இம்முறை நல்லவர்கள் கொதித்து எழ வாய்ப்புண்டு அப்ப இந்த கோமாளி யூனுஸ் அமெரிக்கா ஓடிவிடவும் வாய்ப்புண்டு ஏனென்றால் ஹஸீன நீக்கியபிறகு நடைபெற்ற கலவரங்களுக்கு அவர்தானே பொறுப்பு


MUTHU
நவ 11, 2024 09:23

உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் நல்லவர்கள் என்றும் பிரச்சனைகளை கண்டு அமைதியாய் ஒதுங்கி விடுவது தான்.


Kasimani Baskaran
நவ 11, 2024 04:45

இந்துக்களை பாதுகாப்பதுதான் ஹசீனா செய்த குற்றம். அதற்க்கு தக்க தண்டனை கொடுக்க தயாராக இருக்கிறது வங்கதேசம். இடைக்கால அரசு என்பது பைடனின் ஆதரவு பெற்ற கோமாளிகள் ஆட்சி.


J.V. Iyer
நவ 11, 2024 04:29

ஹிந்துஸ்தான் வங்கதேசத்தின்மீது படை எடுத்து, இந்த அரசை விரட்டி, மீண்டும் ஹசீனாவை பிரதமராக்க வேண்டும். எப்போதுதான் ஹிந்துஸ்தானுக்கு நிம்மதி.


முக்கிய வீடியோ