உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச ஹிந்து துறவி,ஜாமின் மனு தள்ளுபடி

வங்கதேச ஹிந்து துறவி,ஜாமின் மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, 'சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதில் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனு, கடந்த மாதம் 26ல் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சாட்டோகிராம் நீதிமன்றத்தில் இன்று ( டிச.,12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி சைய்புல் இஸ்லாம் மறுத்து ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கின் அடுத்த விசாரணையை 2025 ஜன. 02 தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Yuvaraj Velumani
டிச 12, 2024 09:27

இந்து விரோத கும்பல்


RAJ
டிச 12, 2024 00:56

நம் நாட்டில் நடந்தது. வரும்காலத்தில் நடக்கவும் வாய்ப்பு அதிகம்


குமரன்
டிச 11, 2024 21:27

ஹிந்துக்கள் எப்போது ஒற்றுமையாக இருக்கிறார்களோ அப்போது தான் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் எழுப்புவர்.அதுவரைக்கும் மவுனியாக இருப்பர்.ஒன்று மட்டும் நிச்சயம் ! அவர்களும் ஒரு நாள் பாதிக்கப்படும் போது மட்டுமே உணர்வர்.


N Sasikumar Yadhav
டிச 11, 2024 21:19

பாரதம் மதச்சார்பற்ற என்ற பெயரில் இந்துக்களை வஞ்சிக்கிறது . சிறுபான்மையிரினரின் ஓட்டுப்பிச்சைக்காக அயல்நாட்டில் அவர்கள் செய்யும் பயங்கரவாத செயல்களுக்காக தாக்கப்படும்போதுக்கூட இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் ஓலமிடுகின்றன . ஆனால் அப்பாவி இந்துக்கள் அருகிலிருக்கும் நாட்டில் தாக்கப்பட்டால்க்கூட இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பதில்லை . நம்மையும் குரல் கொடுக்க விடுவதில்லை குரல் கொடுத்தால் கைது செய்கிறது இந்த இந்துமத துரோக திருட்டு திராவிட மாடல் கட்சி .


Ramesh Sargam
டிச 11, 2024 20:54

இந்திய அதிகாரிகள் அவரை காப்பாற்றவேண்டும். வங்கதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். வங்க தேச நீதிமன்றத்தில் ஜாமீன் இல்லையென்றால், இந்திய நீதிமன்றத்தில் வாங்கிக்கொள்ளலாம். இங்கு ஜாமீன் மிகமிக சுலபமாக கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை