உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஜெர்மனி சுவரில் துளையிட்டு வங்கியில் ரூ.314 கோடி கொள்ளை

 ஜெர்மனி சுவரில் துளையிட்டு வங்கியில் ரூ.314 கோடி கொள்ளை

பெர்லின்: ஹாலிவுட்டின் ஓஷன்ஸ் லெவன் பட பாணியில் ஜெர்மனியில் வங்கியில் இருந்து 314 கோடி ரூபாய்க்கு அதிகமான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் கெல்சென்கிர்ச்சன் நகரில், 'ஸ்பார்காஸ்ஸே' என்ற வங்கி செயல்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வங்கிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், வங்கியின் வாகன நிறுத்துமிட பகுதியில் இருந்து பாதுகாப்பு பெட்டகங்கள் இருக்கும் நிலவறை பகுதி வரை சுவற்றில் கொள்ளையர்கள் துளையிட்டனர். உள்ளே புகுந்து, 3,000க்கும் மேற்பட்ட பெட்டகங்களை உடைத்து, 314 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், தங்கக்கட்டிகள், நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தில் தொழில்முறை கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராமகிருஷ்ணன்
ஜன 01, 2026 04:11

கன்னக்கோல் திருடர்கள் என்று சிறு வயதில் கேள்வி பட்டு இருக்கேன். விஞ்ஞான ஓங்கோல் திருடர்கள் காலத்தில் கன்னக்கோல் திருடர்களா.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி