உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவுடனான எல்லை பிரச்னை முக்கால்வாசி தீர்த்தாச்சு : ஜெய்சங்கர்

சீனாவுடனான எல்லை பிரச்னை முக்கால்வாசி தீர்த்தாச்சு : ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெனிவா: இந்திய-சீனா எல்லையில் 75 சதவீத பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.இந்திய -சீனா இடையே எல்லை 3,500 கி.மீ. நீளம் கொண்டது. இதில் இந்தியாவின் திபெத் உள்ளிட சில பகுதிகளை சீனா அவ்வப்போது ஆக்கிரமித்து முகாம் அமைத்து வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே எல்லை பிரச்னை பல ஆண்டுகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப்பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.பின் ஜெனிவாவில் பாதுகாப்பு கொள்கை தொடர்பான உலகளாவிய மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியது, பக்கத்து நாடான சீனா தன் ராணுவ மயமாக்கலை அதிகரித்து வருதே எல்லை பிரச்னைக்கு முக்கிய காரணம். கடந்த 2020 ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த இரு தரப்பு ராணுவ வீரர்கள் மோதலால் இந்திய -சீன உறவு முழுமையாக பாதித்து விட்டது. அதே ஆண்டு மே மாதம் லடாக்கிலும் இரு நாடுகளின் ராணுவங்களும் நிலைநிறுத்தப்பட்டதால், இந்தியா - சீனா உறவு பாதிப்பு தீவிரமாக காணப்பட்டது.எனினும் 2021ல் இருந்து ராணுவ மட்டத்திலான நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது 75 சதவீத எல்லை பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.மேலும் ஜெயசங்கர் விரைவில் சீனா செல்ல உள்ளதாகவும்,அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அப்பாவி
செப் 13, 2024 08:57

சீனாவோட நமது இறக்குமதி வர்த்தகம் பெருகியாச்சு. சீன முதலீடுகளையும் நாம அனுமதிக்க ஆரம்பிச்சாச்சு. சீன ஆளுங்களுக்கு இங்கே விசா நிறைய குடுக்க ஆரம்பிச்சாச்சு. அவனுக்கு வேண்டியது கிடைச்சாச்சு. லடக்கை வெச்சுக்கிட்டு அவன் என்ன செய்யப் போறான்? அமைதி வந்துதும். போய் டீ குடிச்சு கட்டிப் புடிக்கலாம்.


Kasimani Baskaran
செப் 13, 2024 05:45

சீனா சொல்வதற்கும் செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது. பஞ்சசீலம் என்று சொல்லி ஆக்கிரமித்த ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் அது சீனா மட்டுமே. சீன ஆதரவு காங்கிரஸ் இருக்கும் வரை அவர்களின் ஆட்டம் தொடரும். காங்கிரஸ் அழிந்தால் ஒரு வேலை சீனா திருத்தலாம்.


Ganesh
செப் 12, 2024 22:11

வடை நல்லா சுடுறீங்க, நம்பிடுவாங்க


Ramesh Sargam
செப் 12, 2024 21:14

இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சி பிடியில் இருந்து விடுதலை அடைந்து 78 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த சீனாவின் ஆக்கிரமிப்பு பிடியில் இன்றும் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. இப்பொழுது உள்ள மத்திய அரசு சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய பகுதிகளை சீக்கிரம் மீட்டெடுக்கவேண்டும்.


Easwar Kamal
செப் 12, 2024 20:19

அப்படியே tamilanttu மீனவர் பிரச்சனை மற்றும் காவேரி தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் தமிழகம் என்றும் உங்களுக்கு கடமை பட்டு இருக்கும். அப்படியே எய்ம்ஸ் மற்றும் சென்னை மெட்ரோ , கோவை, மதுரை மெட்ரோ பணிகள் துரித படுத்தினால். மக்கள் மனதில் நீங்க இடம் பெறுவீர்கள், நடக்குமா


ஆரூர் ரங்
செப் 12, 2024 20:10

சீனாக்காரன் திபெத் எனும் முழு நாட்டையே ஆக்கிரமித்தபோது பிரதமாராக இருந்த நேரு ஆட்சேபிக்கவில்லை. நட்பு பாராட்டினார். அதனால் திமிர் கூடுதலாகி 1962 போரில் இந்தியாவின் 72000 கிமீ நிலத்தையும் ஆக்கிரமித்தான். சோனியா காங்கிரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டான்.இப்போ பிஜெபி அரசு அதையெல்லாம் சரிசெய்ய படாத பாடுபட வேண்டியுள்ளது


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 20:29

ஒரு கட்சி எப்படி ஒரு நாட்டுடன் - அதிகாரபூர்வமாக இல்லாத விதத்தில் - புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைய முடியும் ????


J.V. Iyer
செப் 12, 2024 20:07

நவீன சாணக்கியர் நமது வெளியுறவுத்துறை அமைச்சர். அவர் தமிழர் என்பதால், இங்குள்ளவர்களுக்கு பொறாமை, எரிச்சல். அவர் எதையும் சாதித்துக்காட்டுவார், நிதி அமைச்சரான தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன் அவர்களைப்போல. இரண்டுபேரும் இரண்டு ரத்தினங்கள் மோடிஜி அமைச்சரவையில்.


நிக்கோல்தாம்சன்
செப் 12, 2024 19:56

கம்யூனிஸ்டுகளை நம்ப முடியாது வாத்தி


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 19:52

99.99% வாக்குறுதிகளை நிறைவேத்திட்டோம் ன்னு புலிகேசி மன்னர் சொல்ற மாதிரியே இருக்குதே .....


சாண்டில்யன்
செப் 12, 2024 19:27

அதாவது தத்தம் பண்ணியாச்சுன்னு சொல்றார்


Hari
செப் 12, 2024 19:46

Tasmac in Paris also....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை