உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் மாநாடு!

ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் மாநாடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு இன்று (அக்.,22) தொடங்குகிறது. புதுடில்லியில் இருந்து மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, 'பிரிக்ஸ்' என்றழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ரஷ்யாவின் கசான் நகரில், இன்றும்(அக்., 22), நாளையும் (அக்., 23) நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், கசான் நகரில் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், புலம்பெயர்ந்த இந்தியர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ugbykzub&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: இந்தியா பிரிக்ஸ் அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் பிரிக்ஸ் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசுவார்கள். அவர்கள் பொருளாதாரம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறியதாவது: நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் பிரிக்ஸ் அமைப்பை புவிசார் அரசியல் போட்டியாளராக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
அக் 22, 2024 12:20

இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை?


raja
அக் 22, 2024 13:13

உடன் பிறப்பே நீ சொல்லும் ஈ இரும்பு அடிப்பவர்கள் காதுகளில் புகுந்து சடுகுடு ஆடுகிறதே ...அதனால் இருக்குமோ....


Anand
அக் 22, 2024 13:26

அதானே, சீக்கிரமா ஓடிவிடு....


பாமரன்
அக் 22, 2024 09:06

இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு வந்த இத்தனை வருடங்களில் என்ன பலன் யாருக்கும் கிடைச்சது உண்டா...?? நம்ம பகோடாஸ் ஸ்டாலினுக்கு சொல்வது போல் சொன்னால் ஏன் வீடியோ காலில் பேசக்கூடாது... மொத்தத்தில் ஐந்து பேர் அதில் ஒருவர் ஏற்கனவே லீவ் எடுத்தாச்சு... மிச்ச நாலு பேரும் நாலு விதமாக பேசுவாங்களான்னு தெர்ல... ப்ளேன் புதுசு அங்கே வாய்க போட டீம் ரெடி பண்ணியாச்சுன்னு போற மாதிரி தான் இருக்கிறது... என்ன சொல்றீங்க பகோடாஸ்... ஓசிகோட்டரா...அப்ப நான் சரியாத்தான் சொல்லியிருக்கனும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை