உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு இன்று தேர்தல் துவங்குகிறது .

பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு இன்று தேர்தல் துவங்குகிறது .

லண்டன்: பிரிட்டன் பராளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு முன்கூட்டியே ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாக கடந்த மே 30 -ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் மற்றொரு கட்சியான தொழிலாளர் கட்சியும் வலுவாக உள்ளதால் ஆட்சியை கைப்பற்ற வெற்றி வியூகம் வகுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SUBBU,MADURAI
ஜூலை 04, 2024 07:03

ரிஷி சுனாக் தோல்வியடைவது ஒன்றுதான் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் விஷயம் அதே போல் அமெரிக்க கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தால்தான் பாரதத்திற்கு நல்லது இந்த இந்திய வம்சாவளியினர் யாருமே நம் நாட்டிற்கு நல்லது செய்ததே கிடையாது மாறாக கெடுதல் நிறைய செய்திருக்கிறார்கள் உதாரணத்திற்கு இந்த ரிஷி சுனக் நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியா ரஷ்யாவில் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவதை தடை செய்தான் இந்த இந்திய வம்சாவளி அதிலும் குறிப்பாக கமலா ஹாரிஸ் வரலாரை பார்த்தால் அவர் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதே நிறைய ஆகவே இந்த இந்திய வம்சாவளியினர் நமக்கு நன்மை செய்வார்கள் என்று யாரும் நம்ப வேண்டாம்


Senthoora
ஜூலை 04, 2024 10:18

கமலா ஹரிஷ் வந்தாலும் ஒன்னுதான், யார் அமெரிக்காவில் வந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக பேசுவாங்க,


மேலும் செய்திகள்