உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் ரேவந்த் ரெட்டி புதுடில்லியில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தூதரக அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்படுமாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ