உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "இந்தியாவால் எங்களுக்கு அச்சுறுத்தல்": கனடா பிரதமர் கண்டுபிடிப்பு

"இந்தியாவால் எங்களுக்கு அச்சுறுத்தல்": கனடா பிரதமர் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டவா: 'இந்தியாவால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எங்களுக்கு அச்சுறுத்தல் தருவதில் சீனா முதலிடத்தில் உள்ளது' என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: கனடாவின் ஜனநாயகத்திற்கு இந்தியா இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனா அச்சுறுத்தல் தருவதில் முதலிடத்தில் இருக்கிறது. அச்சுறுத்தல் தருவதில் 2வது இடத்தில் இருந்த, ரஷ்யா 3வது இடத்திற்கு சென்றுள்ளது. கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம். இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது குற்றம் சுமத்திய போது, ஆதாரமற்றவை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி, 'இந்திய விவகாரங்களில் கனடா அரசு தலையிடுகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது' என இந்தியா பதிலடி கொடுத்து இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

veeramani
ஜூன் 11, 2024 10:23

கனடாவின் பப்பு.. ஏம்ப்பா நாங்க இந்தியர்கள் பறந்து வந்து குண்டா போடப்போறோம்? இப்படி பயந்து உளறுகிறாய் ...


MARUTHU PANDIAR
ஜூன் 07, 2024 17:13

காலிஸ்தான் பயங்காரவாதிகளின் உண்மையான ரட்சிக்கும் தெய்வம் இவர் தான்+++இவருக்கு அடுத்த படியாக சொஜ்ஜிவாலு. சரி தானே ?


கண்ணன்
ஜூன் 07, 2024 10:45

மிக நல்லது


சண்முகம்
ஜூன் 07, 2024 08:53

ஆதாரம் கொடுக்காமல் கூக்குரலிடும் கோமாளி.


R S BALA
ஜூன் 06, 2024 21:10

இந்தாளு கடைசில மென்டலா ஆயிட்டான் போல..


canchi ravi
ஜூன் 06, 2024 20:46

அடேய் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு உங்களைப்போன்ற நாடுகளால்தான் ஆபத்து. வாயை பொத்திக்கோ


Mohan
ஜூன் 06, 2024 20:08

அமைதி மார்க்கத்தினரும், இந்தியாவில் கொலை கொள்ளை கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட காலிஸ்தான் தீவிரவாத போலி சீக்கியர்களும், உங்கள் நாட்டில் எந்தவித அச்சமும், பொறுப்புமின்றி வாழ வழிவகை செய்து, சில லட்சம்சந்தேகமே ஒட்டுக்களுக்காக நீங்கள் தேசப்பற்றை தொலைத்து நாசமாவதில் எங்களுக்கு என்ன பிரச்னை?? கொலைகாரர்களுக்கு நீதிபதிகளே ஆஜராகும் விநோதம் கனடா நாட்டில் மட்டுமே நடக்கும். கனடா நாட்டு ஆட்சியாளர்களுக்கு தேசப்பற்றும் இறையாண்மையும் தேவையில்லாத விஷயங்களாக இருப்பது உண்மையான கனடா நாட்டு குடிமகனுக்கு விழும் பேரிடியாகும்.


Anand
ஜூன் 06, 2024 18:33

நீ உன்னோட கொல்லைப்புறத்தில் வளர்க்கும் கனடாவிற்கு ஆபத்து மட்டுமல்ல அழிவும் ஏற்படும்..


Kasimani Baskaran
ஜூன் 06, 2024 17:43

தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்காமல் தங்கள் நாட்டு குடிமக்கள் என்று சொல்லி அவர்களை வளர்த்து விடுவது தீவிரவாத ஆதரவுதான். கனடாவுடன் நடத்தும் வர்த்தகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


Sankar Ramu
ஜூன் 06, 2024 17:33

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் கனடாவும் பாக்கிஸ்தானாக மாறும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை