உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

பிரிட்டன் அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

லண்டன்: லண்டனில் பிரிட்டன் அமைச்சர் கேத்தரினை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். தற்போது ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிரிட்டன் அமைச்சர் கேத்தரினை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம்- பிரிட்டன் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினேன். கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கடல் சார் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐடி உற்பத்தி துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதை அமைச்சரிடம் எடுத்து கூறினேன். பொருளாதார வளர்ச்சியை கட்டமைப்பதில் பிரிட்டன் ஒத்துழைப்பு அளிக்குமாறு அமைச்சர் கேத்தரினுக்கு அழைப்பு விடுத்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் அதிகாரிகளுடன் சந்திப்பு

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வான்வெளி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறை சார் உற்பத்தி தொழில்களை தமிழகத்தில் விரிவுபடுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Matt P
செப் 05, 2025 09:46

பிரிட்டனில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரிட்டன் மன்னரையோ இளவரசரையோ சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரிட்டன் பிரதமரை கூட சந்திக்க முடியவில்லை.


ManiK
செப் 04, 2025 21:38

ட்ரம்புக்கு அடுத்து,எங்களுடைய திமுக ஸ்டாலினுக்குத்தான் நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.


HoneyBee
செப் 04, 2025 20:07

எல்லாரும் சேர்ந்து வாங்க என் கிட்ட பணத்தை கொடுங்க .. கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன்னு நான் பணம் திண்ணுட்டு போறேன்.


Srinivasan Narasimhan
செப் 04, 2025 19:41

அப்பா ஏன் தமிழ் பாரம்பரிய உடையில் இல்லை.


Artist
செப் 04, 2025 20:45

உடுக்கை இழந்தவன் என்று சொல்லிடக்கூடாதே


VENKATASUBRAMANIAN
செப் 04, 2025 18:33

பொய்களை அவிழ்த்து விட வேண்டியதுதானே. இது1967 இல்லை மக்களை ஏமாற்ற.இப்போதெல்லாம் உடனே பொய் அம்பலமாகி விடும். இதுதான் திராவிட மாடல்


ஆரூர் ரங்
செப் 04, 2025 18:26

டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட் . மாடல் டெவலப்மெண்ட்.


duruvasar
செப் 04, 2025 17:56

ராமசாமி நாயக்கனின் கொள்கையான தமிழ்நாட்டையாவது நீங்கள்தான் ஆளவேண்டும் என்ற திராவிட சித்தாந்தத்தை கோரிக்கையாக ஸ்டாலின் ஐயா முன் வைப்பாரா ?


SUBRAMANIAN P
செப் 04, 2025 17:52

சும்மா வடிவேலு மாதிரி கண்ணடிச்சிருப்பாரு


SUBRAMANIAN P
செப் 04, 2025 17:51

எங்களை பார்த்தா கேனையனா தெரியுதா


என்றும் இந்தியன்
செப் 04, 2025 17:15

ஸ்டாலின்னா ஸ்டாலின் தான்????? கேத்தரின் வெஸ்ட் மந்திரியே இல்லே Catherine West is the UK Parliamentary Under-Secretary of State for the Foreign, Commonwealth & Development Office, a position she has held since 2024. Born in Australia, she is a British Labour Party politician and has been the Member of Parliament for Hornsey and Friern Barnet since 2015.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை