உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மீண்டும் முதலில் இருந்தா... சீனாவில் பரவும் புதிய வைரஸ்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்

மீண்டும் முதலில் இருந்தா... சீனாவில் பரவும் புதிய வைரஸ்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் உருவான கோவிட் வைரஸ் காரணமாக உலகமே முடங்கிய நிலையில், தற்போது அங்கு எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதில் உலகளவில் கோடிக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதனால், அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதில் இருந்து தற்போது தான் பல நாடுகள் மீண்டு வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=teohw9ee&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சீனாவில் புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. ஹியூமன் மெடா நிமோ வைரஸ் எச்எம்பிவி ( Human MetaPneumo Virus) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த வைரஸ், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்குகிறது. இதனால், மருத்துவமனை மற்றும் மயானங்கள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் அந்நாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எச்எம்பிவி எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான காய்ச்சல், நுழையீரல் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிகிறது.இந்த வைரஸ் பரவலை பரவக்கூடிய தொற்று நோயாக சீனா சுகாதாரத்துறையினர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வருவதை கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எச்எம்பிவி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் , மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளிட்டவை முதலில் ஏற்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.இந்த வைரஸ் கடந்த 2001ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது., பொதுவாக சுவாசப்பாதை மற்றும் தொண்டையில் தான் தொற்றை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்டவற்றை உண்டாக்கும். இந்த வைரஸ் காரணமாக 3 முதல் 6 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். அதேநேரத்தில் வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து இது மாறுபடும்.தடுப்பது எப்படிஎச்எம்பிவி வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க கைகளை சோப் மற்றும் தண்ணீர் மூலம் 20 நொடிகள் கழுவ வேண்டும். கைகளை கழுவாமல், கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடக்கூடாது. இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு கூடாது. வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும்.தடுப்பூசிதற்போது வரை இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க எந்த சிகிச்சையும் இல்லை. தடுப்பூசிகளும் இல்லை. சாதாரணமாக அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. இப்பிரச்னை உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Karthik
ஜன 03, 2025 21:25

இந்த உலகுக்கு சீனாவின் 2025 புத்தாண்டு பரிசு இதோ.. On The Way Parcel.. உலகம் பூரா எல்லாருக்கும் இலவசமா கொடுக்குறான்னா.. ப்ப்பா.. எம்மாம்பெரிய மனசுக்காரன்..??


அப்பாவி
ஜன 03, 2025 17:27

புத்தம் புதிய காப்பி.


ராமகிருஷ்ணன்
ஜன 03, 2025 17:26

மூக்கு சுப்பையா இருப்பதால் மூக்கிலே வைரஸ் தாக்குது. பிறகு உலகம் முழுவதும் பரப்புரான். இந்த வைரஸ் லேப்பில் தயாரிக்க பட்டதா என்று மற்ற நாடுகள் ஆராய வேண்டும். சீனனை நம்பவே கூடாது. மீண்டும் மீண்டும் பயோவார் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளது


S Srinivasan
ஜன 03, 2025 17:23

USA please a big nuclear bomb in China so that they think only how to recap, they never think of virus again


Padmasridharan
ஜன 03, 2025 17:21

இந்த செய்தியில் இடம் பெற்ற நுழையீரல் தொற்று.. இது உடலின் எந்த பாகம் ?


Cheenu
ஜன 03, 2025 17:19

சப்பை மூக்கன் கண்டதை தின்னு தின்னு பிரச்னையை உருவாக்குறான்


Yaro Oruvan
ஜன 03, 2025 17:02

சப்ப மூக்கன்ஸ் புத்தாண்டு பரிசு உலக மக்களுக்கு


HoneyBee
ஜன 03, 2025 17:01

மறுபடியும் முதல்ல இருந்தா


Sampath Kumar
ஜன 03, 2025 16:29

என்றைக்கு வீடியோ வெளி இட்டு வைரல் ஆகி வருகிறது என்று சொன்னார்களோ அன்றில் இருந்தே வைரஸ் விழித்து கொண்டது போல ???/ சீனாவின் அடுத்த சமர்ப்பணம் உலகிற்கு


புதிய வீடியோ