உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்

ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்ற ரபேல் போர் விமானம் குறித்து சீனா போலியான தகவலை பரப்பி வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ரபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின. இதையடுத்து, பிரான்ஸ் தயாரிப்பான ரபேல் போர் விமானங்களுக்கு உலகளவில் மவுசு கூடியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8zkki6kx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய பல்வேறு உலக நாடுகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இதுவரையில் பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் 533 ரபேல் விமானங்களை விற்பனை செய்துள்ளது. அதில், இந்தியா, கத்தார், எகிப்து, கிரீஸ் மற்றும் குரோஷியா, யு.ஏ.இ., இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் 323 விமானங்கள் விற்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா 42 ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த நிலையில், தங்களின் முதன்மை போர் விமானமான ரபேலின் விற்பனையை சீர்குலைக்கவும், சீன போர் விமானங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா பயன்படுத்திய ரபேல் போர் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, பொய்யான தகவல்களை சீனா பரப்பி வருகிறது. இது பிரான்ஸ் நாட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது; பிரான்ஸின் ரபேல் போர் விமானங்களின் விற்பனையை குறைக்க சீனா முயற்சிக்கிறது. இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான போரில் ரபேல் விமானத்தின் செயல்பாடு மோசமாக இருந்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். சீனா ராணுவ உபகரணங்களை விற்பனையை அதிகரிக்க இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர், என தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போரின் போது புதிதாக 1,000 சமூக வலைதளப்பக்க கணக்குகள் தொடங்கப்பட்டு, சீனா ராணுவ தொழில்நுட்பம் குறித்து ஆதரவு கருத்துக்கள் பகிரப்பட்டதாகவும் பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 14:52

கட்டுமர சம்பந்தி வீட்டுப் பத்திரிக்கை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நமது ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என முதலில் செய்தி வெளியிட்டுவிட்டு பிறகு அச்செய்தியை அகற்றிவிட்டது . நம்முடைய எதிரிகள் வெளியில் உள்ளதை விட உள்நாட்டில்தான் அதிகம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 07, 2025 12:14

சீனா இறுமாப்பில், மமதையில் எதிரிகளை அதிகமாகிக்கொண்டே செல்கிறது...


அசோகன்
ஜூலை 07, 2025 12:06

அட இப்போ சீனாவே s400 வேணும்னு ரஷ்யா கிட்ட கேட்குது


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 11:57

இந்தியாவுடனான நான்கு போர் களிலும் பாகிஸ்தானே பெரு வெற்றி பெற்றதாக அங்குள்ள பாடப் புத்தகங்களில் உள்ளது. விரைவில் விடியல் மாநில பாடப் புத்தகங்களிலும் அதே பொய்யை சேர்ப்பார்கள். சிறுபான்மை வாக்கு வேணுமே.


Pandi Muni
ஜூலை 07, 2025 16:04

பாகிஸ்தானுக்கான சிறுபான்மைக்கு இங்கென்ன வேலை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டதென்றே தோன்றுகிறது


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 11:54

ரஃபேல் பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டு விழுந்திருந்தால் அவர்களே வீடியோ ஆதாரம் மூலம் கொண்டாட்டம் நடத்தியிருப்பர். இந்திய எல்லைக்குள் விழுந்திருந்தால் பொது மக்களே பார்த்திருப்பர். இரண்டுமே நிகழவில்லையே. தீய.மு.க சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானுக்கு வதந்தி பரப்ப ஐடியா குடுக்குறாங்க. இருவரின் குரல்களுக்கும் 99 சதவீத ஒற்றுமைகள் உள்ளன.


ramesh
ஜூலை 07, 2025 13:08

dmk எப்போது இந்தியா போரில் தோல்வி அடைந்ததாக அல்லது இந்தியா விமானங்கள் பாகிஸ்தான் ஆல் சுட்டு வீழ்த்த பட்டதாக எப்போது கூறியது. தாங்கள் அப்படி பகல் கனவு கண்டு விட்டு இஷ்ட படி கற்பனையாக தேச பாதுகாப்பு விஷயத்தில் கருத்து பதிவு செய்வது சரியான முறை கிடையாது அரசியலுக்கும் தேச பாதுகாப்பு விஷயத்துக்கும் கருத்து போடும் பொது கவனமாக பதிவு செய்யவேண்டும் .


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 14:36

தமிழ்நாடு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று பேசியது மறக்குமா?


முக்கிய வீடியோ