உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கூடாது; உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கூடாது; உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ஜிங்: தங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிபராக பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப், மற்ற நாடுகள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு நிகராக பரஸ்பரம் அதே அளவுக்கு வரி விதிப்போம் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இந்தியா உள்பட பல நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியும், மாற்றியும் அமைத்தார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனால், அமெரிக்கா- சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், பெய்ஜிங்கிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்று அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு எதிராக, உறுதியான மற்றும் பரஸ்பர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தப் போரை தீர்க்கும் நாடுகளுக்கு மதிப்பு கொடுப்போம் என்று கூறிய சீனா, அமெரிக்கா மட்டுமின்றி, எங்களை குறைத்து மதிப்பிடும் நாடுகளுடனும் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.தங்களிடம் வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு கோரும் நாடுகளிடம், சீனாவை தனிமைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 21:01

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வருவதை மற்றும் சில ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதை ஒட்டி நமக்கு எச்சரிக்கையா ??


Jagan (not a Sangi anymore)
ஏப் 21, 2025 19:45

supply chain மூல பொருள்/கச்சா பொருள் எல்லாம் சீனா கண்ட்ரோல். அவன் மூல பொருட்களை நிறுத்தினால், இந்தியாவால் ஆன்டி பயாடிக் கூட தயாரிக்க முடியாது . ஸ்டெர்லிட் மூலம் தாமிர உற்பத்தியை தடுத்தான், இப்போ டங்ஸ்டன் எடுக்க விட மாட்டான் நிறைய ஹய் டெக் சாதனங்களில் மூல பொருள்.


Gokul Krishnan
ஏப் 21, 2025 18:12

அமெரிக்கா ஒன்றும் யோக்கிய சிகாமணி கிடையாது அமெரிக்கா என்றும் நம்ப தகுந்த நாடு இல்லை


Kumar Kumzi
ஏப் 21, 2025 14:58

உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வாதிகார சீனாவை ஒதுக்க வேண்டும்


ராமகிருஷ்ணன்
ஏப் 21, 2025 14:49

அமெரிக்கா வேலை செய்யாமல் சம்பாதிக்க நினைக்கிறது சீனா தன்னை கேட்டுதான் உலக நாடுகள் அனைத்தும் நடக்க வேண்டும் என்று நினைக்கிறது. இவர்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க நினைப்பது மிக பெரிய தவறு. அதற்கான தண்டனையை அடைந்தே தீர்வார்கள்


Thayumanavan Asok
ஏப் 21, 2025 20:42

உக்ரைன் நாட்டு நிலை என்ன? அமெரிக்கா போரை நிறுத்து என மிரட்டி பணிய வைத்து விட்டு ரஷ்யா அந்தாட்டை தொடர்ந்து தாக்க விழி செய்தது. உக்கிரைன் நாட்டு தாதுப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கு. சீனா மட்மெல்ல அமெரிக்கா வின் எண்ணங்களும் நட்பை விரும்பும் நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை. ஜெய்ஹிந்த்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 21, 2025 14:43

Corno virus was the gift to world from China with the connivance of american pharma lobby, US deep state and Biden/Obama. Trump rightfully banned WHO organization which was silent on Chinese fraudulent activities in relation to Covid


Srinivasan Krishnamoorthy
ஏப் 21, 2025 14:41

Finally china faces the heat. So far they managed to bribe previous american presidents and no longer will work under Trump. China is isolated, loose market from US and Euro nations


Bhakt
ஏப் 21, 2025 14:04

எல்லாரும் சேர்ந்து ......


Thiru
ஏப் 21, 2025 12:53

என்னப்பா சீனா... என்னா பெரியண்ணன் ஆகப் பார்க்கிறாயா?


krishna
ஏப் 21, 2025 12:36

you rejected the bills 3times


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை