உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாலத்தீவு அதிபருக்கு எதிராக பார்லி.யில் கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக பார்லி.யில் கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: மாலத்தீவு பார்லிமென்டில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அதிபர் முகமது முய்சு மீது கண்டனம் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சியான, மாலத்தீவு ஜனநாயக கட்சி எதிர்கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iieust40&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் எதிரொலியாக நேற்று நடந்த பார்லி., சிறப்பு கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் அதன் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.,க்களுக்கும், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சிஎம்.பி.,க்களுக்கும் இடையே வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் அதிபர் முகமது முய்சு சீனாவின் அடிமையாகிவிட்டார். சீன ஆதரவாளராக செயல்படும் அதிபருக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து நெருக்கடி தர எதிர்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிபர் முகமது முய்சுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mohan
ஜன 30, 2024 10:11

இந்த கண்டன தீர்மானம் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது ... வேணும்னா போராடிட்டே இருக்கலாம் எதிர்க்கட்சிகள் ...பதவியை விட்டு தூக்குங்க எல்லாம் சரியாயிரும் ..


ரமேஷ்VPT
ஜன 30, 2024 06:44

இவன் சீனாவின் கைக்கூலி. மாலத்தீவை சீனாவிடம் அடகு வைத்துவிட்டான். முடிந்தது மாலத்தீவு.


Ramesh Sargam
ஜன 29, 2024 23:36

அவனும், அவன் மூஞ்சியும், பார்க்க சகிக்கல...


kskmet
ஜன 29, 2024 23:20

ஏதோ நம்மநாட்டு கடற்கரையில் ஐந்து நிமிடம் காற்றோட்டமாக இருக்கலாம் என்று நடந்ததற்கு இத்தனை கலாட்டாவா?


தாமரை மலர்கிறது
ஜன 29, 2024 21:21

மாலத்தீவு நெடுங்காலமாக இந்தியாவிற்கு சொந்தம். நமது பாதுகாப்பிற்காக மாலத்தீவை மீட்டெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.


Dharmavaan
ஜன 30, 2024 07:44

இந்தியாவில் பரவிவிடுவான்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜன 29, 2024 20:57

அவங்களே அகண்ட பாரதத்தை அமைக்க உதவுறாங்களா ????


Pandi Muni
ஜன 29, 2024 20:52

ஆளப்பாத்தா துருக்கியில ஒட்டகம் மேய்கிறவர் மாதிரி இருக்கார் இவர் அதிபரா?


தமிழ்
ஜன 30, 2024 12:11

தப்பா பேசாதீங்க.


sridhar
ஜன 29, 2024 20:42

Not only in India , nowhere in the world can you oppose Modi and be peaceful.


rajan_subramanian manian
ஜன 29, 2024 20:41

கர்மா.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ