உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி குறித்து அவதூறு: -மாலத்தீவு அமைச்சர்கள் நீக்கம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு: -மாலத்தீவு அமைச்சர்கள் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலி:பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மால்ஷா ஷரீஃப், மசூம் மஜீத் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிரதமர் மோடி லட்சத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர். “உயிர் காக்கும் உடை அணிந்த மோடி இஸ்ரேலின் கைப்பாவை” என மரியம் கூறியிருந்தார்.

மாலத்தீவு அரசு அறிக்கை

'வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் தரக்குறைவான கருத்துக்கள் இருப்பதை மாலத்தீவு அரசாங்கம் அறிந்திருக்கிறது. இந்தக் கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.லும், இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்களை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என மாலத்தீவு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாலத்தீவு முன்னாள் அதிபர் கண்டனம்

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவின் மந்திரியான மரியம் ஷியூனா மற்றும் ஆளும் கட்சியினர் பலர் கேலி செய்ததையடுத்து மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்துள்ளார். மந்திரி மரியம் ஷியூனா பயன்படுத்தும் மொழி 'பயங்கரமானது'. மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா 'நெருங்கிய கூட்டாளி' என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ellar
ஜன 09, 2024 08:04

இவர்களுடைய ஹோட்டல் தரம் ( ஏதோ இந்திய ஹோட்டல்கள் நாறுவதாக கண்டுபிடித்துள்ளதால்) அங்கு தங்கியவர்கள் அறிவர். .நமது கிராமத்து பேச்சு... "மூக்கில்....வாசம் தெரியாதுங்க " என்பதை நினைவூட்டுகிறது.


N.Purushothaman
ஜன 08, 2024 07:19

ஏற்கனவே லட்சத்தீவுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ஒதுக்கி இருக்காரு ...இப்போ இது பத்தாயிரம் கோடி ஆகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ....மொத்தத்தில் மாலத்தீவிற்கு கெட்ட நேரம் ஆரம்பமாகி விட்டது ... தங்களுக்கு உதவி செய்பவர்களை ,ஆதரிப்பவர்களை மதம் என்ற ஒற்றை காரணத்திற்க்காக எதிர்க்கவும் ,விஷம கருத்தை பரப்பவும் தயங்க மாட்டார்கள் ....அந்நாட்டு அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களால் பல இந்தியர்கள் தற்போது அங்கு செல்வதற்காக போட்டு இருந்த பயண திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள் ...


Ramesh Sargam
ஜன 08, 2024 06:52

அந்த மூன்று பெரும் சீனாவின் ஒற்றர்கள். அவர்களை மாலத்தீவு அரசாங்கம் நாட்டை விட்டு துரத்தவேண்டும், அல்லது அந்நாட்டு சிறையில் அடைக்கவேண்டும்.


kijan
ஜன 07, 2024 23:46

சூப்பர் பிரதமர் .... அடுத்த இலக்கு லட்சதீவின் சுற்றுலா .... இது போன்ற தொலைநோக்கு பார்வைக்கு தலை வணங்க வேண்டும் .... இந்த மாலத்தீவு அமைச்சர்கள் தேவையில்லாமல் சீண்டி விட்டார்கள் .... அவர்கள் சீண்டியது என்னவென்றால் .... சுற்றுலாவில் மாலைதீவுடன் இந்தியா போட்டி போடுவது எளிதல்ல என்பது .... வரும் செய்திகளின்படி பிரதமரின் லட்சத்தீவு பயணத்திற்கு அப்புறம் நிறையபேர் மாலத்தீவு சுற்றுலாவை கேன்சல் செய்துவிட்டு ...லட்சத்தீவுக்கு புக் செய்கிறார்களாம் ..... google search ல் இரு நாட்களாக அதிகம் தேடப்பட்ட வார்த்தை லட்சத்தீவு .... வலிக்காமல் இருக்குமா .... உள்ளூர் ஆட்களை தூண்டிவிடலாம் கவனம் தேவை ...


NicoleThomson
ஜன 07, 2024 22:44

அந்த மாலத்தீவு அமைச்சர் தமிழகத்தில் எங்கேயோ ஆன் உடை அணிந்த அரசியல்வாதி போல இருக்கிறாள்


N Annamalai
ஜன 07, 2024 22:23

நன்றி இல்லா மக்கள் .தனி ஈழம் வந்து இருக்க வேண்டிய நாடு .இன்று அந்த நாடு முழுதாக உயிருடன் இருக்க யார் காரணம்


SUBBU,MADURAI
ஜன 07, 2024 21:57

More than 8166 hotel bookings and around 2500 flight tickets are cancelled since Maldives ministers started abusing Bharat and Modi..


N.Purushothaman
ஜன 08, 2024 07:20

இது ஆரம்பம் தான் .....இன்னும் இருக்கு ....


HoneyBee
ஜன 07, 2024 21:47

அழிவு வந்தால் புத்தி கெட்டு விடும்.. இனி இலங்கை நிலை தான் மாலத்தீவுக்கு


Krish
ஜன 07, 2024 21:45

நன்றி கேட்ட உலகமடா இது......


Nesan
ஜன 07, 2024 21:38

BOYCOTT MALDIVES...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ